மலேசிய அரசாங்கம் இரகசியமாகவும் வலுக்கட்டாயமாகவும் இரு சிறீலங்கா அகதிகளையும் அடைக்கலம் தேடி வந்த இன்னொருவரையும் நேற்று சிறீலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. மலேசிய அரசாங்கத்தின் இந்த அநியாய, அக்கிரம மற்றும் அநாகரீகமான நடவடிக்கையை மனித உரிமைக் கழகமான சுவாராம் இன்று கடுமையாக விமர்சித்து கண்டனம் செய்தது.
இயக்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வை சுவராம் தலைவர் கா.ஆறுமுகம், அதன் வழக்குரைஞர் நியு சின் இயு, ஒருங்கிணைப்பாளர் ஆர். தேவராஜன் ஆகியோர் வழி நடத்தினர்.
கோலாலம்பூரிலுள்ள ஐநா ஹைகமிசனால் அகதிகள் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த கிருபாஹரன் மற்றும் கிருபநாதன் ஆகியோருடன் அடைக்கலம் கோரி மனு செய்திருந்த குசேந்தன் என்பவரையும் மலேசிய அரசாங்கம் அனைத்துலக நீதி கோட்பாடுகளுக்கு முரணாக நாடு கடத்தி மீண்டும் சிறீலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைத்ததை சுவாராம் கடுமையாகக் கண்டிக்கிறது என்று அக்கழகத்தின் தலைவரான கா. ஆறுமுகம் இன்று காலை மணி 11.00 க்கு பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“மலேசிய அரசாங்கத்தின் இச்செயல் ‘Non-refoulement’ என்ற அனைத்துலக வழக்கமான நடைமுறைச் சட்டத்தை மீறியதாகும். இச்சட்டப்படி அரசாங்கத்தின் கொடுஞ்செயலால் உண்மையாகக் பாதிக்கப்பட்ட ஒருவர் அக்கொடுங்கோலரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுவதை தடை செய்கிறது”, என்று கூறிய ஆறுமுகம், “இம்மூவரும் நாடு கடத்தப்பட்டதை அவர்களுடைய குடும்பத்தினருக்கும், ஐநா அகதிகள் ஹைகமிசனுக்கும், சுவாராமுக்கும் தெரிவிக்கவில்லை. இதனால் நாங்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளோம்”, என்றார்.
போலீசார் இம்மூவரையும் கடந்த 15.5.2014-இல் கைது செய்தது. அவர்கள் 14 நாள்கள் வரையில் தடுப்புக்காவலில் வைத்திருக்க ரிமாண்ட் மனுவை போலிஸ் பெற்றது என்றும் அதைத்தொடர்ந்து நேற்று அவர்களை நாடு கடத்தியது சட்டப்படி தவறாகும் என்று சுவாராமின் மனித உரிமை வழக்குரைஞரான நியு சின் இயு அச்செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இம்மூவரும் நடத்தப்பட்ட முறை இமிகிரேசன் சட்டத்திற்கு முற்றிலும் முரணானதாகும் என்றாரவர்.
இமிகிரேசன் இலாகா இம்மூவரையும் தடை செய்யப்பட்ட நபர்கள் என்று அறிவிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய நியு சின் இயு “இமிகிரேசன் சட்டம் முற்றிலும் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த இலாகா இவ்வாறு நடந்து கொண்டது இது முதல் தடவை அல்ல. 2004 மற்றும் 2012 ஆண்டுகளிலும் இவ்வாறு நடந்துள்ளது”, என்றாரவர்.
“இம்மூவரும் நாடு கடத்தப்பட்டது அவர்களை மீண்டும் இனப்படுகொலை நடத்தி வரும் கொலையாளியிடம் கொடுப்பதற்கு ஒப்பாகும். மலேசியா அனைத்துலகச் சட்டத்தை மீறிவிட்டது”, என்று இடித்துரைத்த அவர், “அம்மூவரும் தீவிரவாதிகள் என்றால், போலீஸ்படைத் தலைவர் அவர்களை ஏன் நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை”, என்று வினவினார்.
சித்திரவதை நிச்சயம்
மலேசிய அரசாங்கத்தால் அனைத்துலகச் சட்ட மற்றும் நீதி முறைகளுக்கு முரணாக நாடு கட்டத்தப்பட்டுள்ள அம்மூவரையும் நிச்சயமாக சித்திரவதை செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை என்பதோடு அவர்கள் உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம் என்றும் கா. ஆறுமுகம் கவலை தெரிவித்தார்.
அவர்களை நாடு கடத்துவதில் ஏன் இந்த அவசரம்? அந்நாட்டு அரசாங்கத்திற்கு பயந்துதானே இங்கு அடைக்கலம் தேடுகிறார்கள். அப்படி வெளிநாடுகளில் வாழ்கின்றவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் சிறீலங்கா அரசாங்கத்தின் திட்டத்தை மலேசிய அரசாங்கம் ஆதரிக்கிறதா?
மே 25, 2014 இல், போலீஸ் படைத்தலைவர் காலிட் அபு பாக்கார் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறியுள்ளார். அச்சந்தேகப் பேர்வழிகள் அதிகாரிகளின் நடவடிக்கைகளிலிமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக யுஎன்எச்சிஆர் அட்டைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்று அவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
“அம்மூவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமல், தீவிரவாதிகள் என்று நிருபிக்கப்படாத நிலையில் அவர்கள் மீது அவ்வாறான முத்திரை குத்தப்பட்டுள்ளதின் அடிப்படை மற்றும் உள்நோக்கம் குறித்து கேள்வி எழுப்புகிறோம் என்றார் சுவராம் ஒருங்கிணைப்பாளர் ஆர். தேவராஜன்.
“இந்த அறிக்கை இவ்விவகாரம் மீது விசாரணை மேற்கொண்டுள்ள அதிகாரி அளித்த தகவலுக்கு முற்றிலும் எதிர்மாறானதாக இருக்கிறது. இம்மூவரும் இமிகிரேசன் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் கைது செய்யப்பட்ட மே 15 ஆம் தேதியிலிருந்து 14 நாள்களுக்கு அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரி சுவாராமிடம் தெரிவித்திருந்தார்”, என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறிய தேவராஜன், “அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஏன் இந்த திடீர் மாற்றம்: இமிகிரேசன் சட்டம் சம்பந்தப்பட்ட குற்றங்களிலிருந்து இப்போது தீவிரவாதத் தொடர்பு என்ற குற்றச்சாட்டு. இது அவர்கள் நாடுகடத்தப்படுவதை நியாயப்படுத்துவதற்காக கட்டப்படும் கதையா?”, என்று வினவினார்.
ஐஜிபி சட்டஆளுமைக்கு உட்பட்டு நடக்க வேண்டும்
குற்றவாளி என்று நிருபிக்கப்படும் வரையில் மாசற்றவர் என்பது மலேசியாவின் சட்டஆளுமையாக இருப்பதாகத் தெரியவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய ஆறுமுகம், “ஐஜிபி ஒரு நீதிபதி அல்ல என்பதையும் அவர் அகதிகளையும் அடைக்கலம் தேடுபவர்களையும் முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமலும் விசாரணை செய்யப்படுவதற்கான அவர்களுக்கு உரிய உரிமைகளை அளிக்காமலும் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு செயல்படக்கூடாது என்பதை சுவாராம் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறது”, என்றார்.
ஐஜிபி அவரது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினாரா என்பதை விசாரிக்க ஒரு சுயேட்சையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சுவாராம் முன்வைப்பதாக ஆறுமுகம் தெரிவித்தார்.
ஐஜிபி – சட்டம் என் கையில் என்று ஆடுகிறார் போலும்… அது நம் கையில் உள்ளது என்பதை அடுத்த தேர்தலில் ஆவது நிருபிப்போம்.
ஒரு வேளை ஐஜிபி ஷாரியா சட்டத்தைப் பின்பற்றுகிறாரோ? அல்லது இஸ்லாமிய சட்டத்தைப் பின்பற்றுகிறாரோ? அவர் என்ன சட்டத்தைப் படித்துக் கிழித்திருக்கிறார் என்று யாருக்குப் புரிகிறது. அகதிகளை அநியாயக்காரர்களாக நடத்துவது இந்த ஒரே அரசாங்கம் தான்!
நம்மவர்களை இந்த கம்மனாட்டிகள் எல்லா விதத்திலும் அநியாயம் பண்ணிடுவான் கள்-நம்முடைய ஒற்றுமையின்மை அத்துடன் இந்திய அரசின் கையாளாக தன்மையுமே நம்மவர்களின் இழிநிலைக்கு காரணம்.
ஏன் இந்த எட்டப்பர் வேலை?
இவனைப்போன்ற கேடு கேட்ட தரமில்லா தகுதி இல்லா பிண்டம் ஜால்ரா அடித்தே பதவிக்கு வந்தவன். அம்னோ குண்டர்களின் தலைவன் வேறு எப்படி இருப்பான்?
தலைவரே ………………………….தமிழர்களின் கதி ……………..என்ன சொல்லி
சாவது …….உங்களை போன்றவது இருக்கிரிர்களே ………………….. கொஞ்சம் மனது …………………… சந்தோசம் படுத்து
தமிழனுக்கென்று தனி ஒரு நாடு இல்லாத வரை இந்த அவல நிலைதான்! தனி தமிழர் நாடு ஒன்றே உலக தமிழர் நலனை நலனை காக்கும்!
நீங்கள் (மலாய்காரர்கள்) விதைப்பதெல்லாம் ஒரு காலத்தில்
நீங்களே அறுவடை செய்ய வேண்டி வரும்.
எந்த நாட்டிற்குச்சென்றாலும் தமிழர்களை அலைக்கலைப்பதெ சிலருக்கு வேலையாய் போய்விட்டது.
ஆம் தமிழனுக்கு சொந்த நாடு இல்ல ,,இதற்க்கு காரணம் தமிழன் தன் வாயால் கேட்டதுதான் ,,சொன்னால் மட்டும் ரோசம் பொத்துகிட்டு வந்திரும் ,ஆதிகாலத்திலேயே தமிழன் புத்தியோடு இருந்திருக்க வேண்டும் அல்லது பழைய சோத்தையாவது சாப்பிட்டால் புத்தி வந்திருக்கும் .இவனுங்கதான் ரெண்டும் கேட்டானுங்க ஆச்சே .சேரன் சோழன் பாண்டியன் ,ஒரு pennukkaka நாட்டையே கூறு போட்டவணுங்க ,,இதில் என்ன அதிசியம் என்றால் சேரன் சோழன் பாண்டியன் இவனுங்க முன்றுபெரும் தமிழர்கள் கிடையாது .தமிழனுக்கு சொந்த moli கூட கிடையாது ,ஆதிகாலத்தில் கலப்பிரர்கள் கற்று கொடுத்த கொஞ்சம் மிஞ்சிய தமிழை கற்று கொடுத்து போனார்கள் .அதான் தமிழன் ,எவன் தமிழா சுத்தமாக பேசுகிறானோ அவன் தமிலனாகிவிடுகிறான் .தமிழன் வணங்கும் கடவுள்களை ஆராய்ச்சி செய்து பாருங்கள் ,ஒரு கடவுள் கூட தமிழா கடவுளாக இருக்க மாட்டார்கள் முருகனை தவிர ,முருகனுக்கு கூட சரித்திரம் இருக்கிறதாம் ,அதும் ஒரு காலத்தில் அவரும் மருத்துவராம் ,காலபோக்கில் வினையை தீர்பவனகா மாறிவிட்டார் ..போங்கடா போங்கடா இருக்கிற மொழி பாதுக்காக்க பாருங்கடா ,தமிழ் மொழி நாள்தான் தமிழன் உருவாகினான் ,தமிழ் மொழி இல்லையேல் அவன் காட்டு மிராண்டியாக தான் இருந்திருப்பான்
மலேசியா ஐநா அலுவலகம் அண்டைநாட்டு அகதிகளை விருந்தாளிபோல் கவனிகிரார்கள் .. தமிழன் என்றால் பலமணி நேரம் காத்திருக்க வைகிறார்கள் ,, அண்மைல் முன்னாள் போராளி அகதியாக மனைவி குழந்தையோடு கோலாலம்பூரில் வசித்துவந்தார் … ஐநா இந்த அகதி விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது … ஒருநாள் லோரி உதவியாளராக வேலைக்கு போகும்போது போலீஸ் கைது செய்து பலமாதமாக தடுப்பு முகாமில் இருதவர் யு என் எச் ஆர் கண்டுக்கவே இல்ல ..திடீர் என்று இறந்துவிட்டார் என்று செய்தி மனைவிக்கு சொல்லபட்டது .. முச்சு திணறல் !!! ஆள் நல்ல கருப்பு முரட்டு பார்வை .. அவர் இயல்பே அப்படித்தான் .. நம்பாளு ஓராங் இந்தியா எண்டு சொல்லி போட்டுதாக்கி விட்டார்கல்போல் !!! பொணத்த பலநாட்கள் கொடுக்கவில்லை பல கெடுபிடிசெஇது கொடுத்தார்கள் !! ஐநா அலுவலகத்தில் நேர்மையான அதிகாரிகள் அரிது .. லஞ்சம் … 5000 வெள்ளி கொடுத்தால் 3மாசத்தில் ஐநா அங்கிகரித்த அடையாள கார்ட்டு கிடைக்கும் … இலங்கை அரசின் கைகூலியாகவும் பலபேர் ஆப்படிகிரார்கள் .மதம்மாறினாலும் கிடைக்கும் … அகதிகளுக்கு கிடைக்கும் பணத்தை மதமாற்ற தேவைக்கு பயன்படுத்துகிறார்கள் … முக்கால் வாசி அகதி தமிழன் மதம் மாற்றபட்டுவிட்டான் … அனைவரும் போப்பாண்டவருக்கு பின்னாடி சென்றால் பரவாஇல்ல எப்படியாவது நம் மக்கள் நிம்மதியாக வாழட்டும் என்று விடலாம் …. ஒருவன் தூய ஆவிthaan கடவுள் என்கிறான் ,,,இன்னொருவன் இல்ல இல்ல யகொவாதான் என்கிறான் , மற்றவன் கர்த்தர் என்கிறான் ,இயேசு என்கிறான் ,பிதா என்கிறான் !!!!! ஐயோ கண்ணா கட்டுதே என்மக்கள் கால்போனபோக்கில் நடக்கிறார்கள் ,,, நம்ப யானை தலை ,கிருஷ்ணா ,முருகரு ,சிவனாரு மாதிரியா ??? ஒண்ணுமே புரியல ?? அதுசரி முள்ளிவைகாலில் இனபடுகொளைகுள்ளான எம்மக்களுக்கு மே18 எத்தனை ஆலயங்களில் பிராத்தனை செய்தார்கள் ? பிரதோஷம் என்றால் சிலோன் டமிழன் ஆலயத்துக்கு படை எடுப்பான் .. லிங்கத்தில் பாலையும் திரையும் உதினால் செல்வம் பெருகுமாம் அய்திகம்!! அவனவன் பிரச்சனை அவனவனுக்கு … நாளைக்கே என்னையும் புடிச்சு இலங்கைக்கு அனுப்பலாம் ,,,, பேசாம இஸ்லாத்துல பூந்திடல்லாம் என்னா அதுலையும் ரெண்டு பிரிவு இருக்கிறதாமே !! சன்னி ,சியா ,,, என் செய்திய பார்த்துபோட்டு எனக்கண்ட காலித் அன்னை புதிசா ஏதாவது நம்பளுக்கு எதிரா திட்டம்போடாம இருந்தாசரி .
நாடுறிந்தும் இனவாதிகளால், அகதிகள் ஆக்கப்பட்டு, அபயம் தேடி நாடி வந்தோம் மலேயாவுக்கு ,மனிதநேயமற்று மீண்டும் அகதிகள் உருவாக்கப்பட்ட இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டோமே ,களபலிக்கு ,காப்பற்றக்கூடியவர் யாரோ என்று தீரும் இந்த மனித பேரவலம் ,ஈழத்தின் மாற்றங்கள் ,என்று ஏற்றங்களாய் மாறும் , விடியலுக்கு விடை கிடைக்கட்டும் ,மாற்றங்கள் உருவாகட்டும் .
தமிழனின் முழு சரித்திரம் தெரியாமல் புலம்பாதீர்கள்! நீங்கள் கூறும் அதே ஒற்றுமை ஏன் இன்று இல்லை? மதம் இறைவனை அடைய ஒரு வழிகாட்டி மட்டுமே! பாலும் பன்னீரும் இறைவனா கேட்டான்?
அவனை அணுகும் தமிழர் ஒன்று கூடுவதே அதின் நோக்கம்! ஒன்று கூடும் வேளையில் அவரவர் குறை நிறைகளை பகிர்ந்து பகுத்தறிவோடு அடுத்து அடுத்து செயல்பாடுகளை
கண்டறிவதே உண்மையான காரணமாக இருந்தது அந்நாளில்! திருக்குறள் அறவழி வாழ்வியல் வழி காட்டியை விட
சிறந்தது எதுவும் இல்லை! இறைவனை அடைய தேவாரம்,
திருமுறை எனும் எண்ணற்ற வழிகள் இருந்தும் தமிழனின் அறியாமை தங்களைவிட வேறொன்று இருப்பதாகவும் எண்ணி அலைமொதுகிறான் அன்றாடம்.இறைவன் ஒருவனே அவனும் உன்னுள்தான் இருக்கிறான் என்று அறியும் பொது அனைத்தும் தெளிவாகும்!அதுவே இன்னொருவரை கண்டதும் வணங்கும் நம் பண்பாடு! இன்று முதல் தமிழர்களை வணக்கத்திற்கு உரியவர்களாக காணுங்கள் அதுவே ஒற்றுமையை நிலை நிறுத்தும்.உலகிற்கே வாழ கற்று கொடுத்த நாம் முதலில் கண்டதே அனைத்தும்! இறைவனுக்கே சமர்பித்துள்ளோம் திருவாசகம்! அதைவிட வேறு என்ன வேண்டும்? துன்பங்கள் நம்மை செம்மை படுத்தவே துவண்டு போக அல்ல! எல்லாம் சிவமயம்!
ஏற்கனவே…இந்த கேடுகெட்டவர்களுக்கு தமிழர்களை கண்டால் ஆகாது..பின்பு எட்டப்பன் வேலை செய்ய சொல்லியா கொடுக்க வேண்டும்….!!!
BN-ல் அங்கம் வகிக்கும் இந்திய அரசியல் கட்சிகள் ஒன்று கூடி இதுகுறித்து நமது அரசிடம் விளக்கமாக எடுத்துக் கூறி இதுபோன்ற ஈழ அகதிகள் விரோத போக்கு மேலும்2 தொடர்ந்து நடவாமல் இருக்க ஆவன செய்ய வேண்டும். இதனை செய்ய அவர்களுக்கு போதிய இனப்பற்றும், ஆர்வமும், துணிவும் இருக்கிறது என நம்புவோம். அவர்கள் தொடர்ந்து சும்மா கூலுக்கும் கூலிக்கும் மாறடித்துக்கொண்டு இருக்கும் நிலை மாறவேண்டும்
ஏன் இந்த கொடுமை……
ஞானியின் கருத்து தமிழர்களை நல்வழிப் படுத்தி அறவழியில் இட்டுச் செல்லும். தமிழன் வாழ்வாங்கு வாழ திருமுறைகள், திருக்குறள் காட்டும் வழியைப் பின்பற்றுவோம்.
8 ஆயிரம் இலங்கை அகதிகள் …100,000 மியன்மார் முஸ்லிம் அகதிகள் நாட்டில் குப்பை பொறுக்க UN கார்டுகள். செலயாங் பாசார் புரோங்கில் அடி தடி குடும்பம் விபச்சாரம் ஆல் கண்ணை முடிக்கொண்டு ஓடுது.
LTT மட்டும் terrorist டாம் ..உலக நாடுகள் LTT தமிழ் ஈழ சிக்கலை அங்கீகரித்து விசாரணை நடத்தி வருகிறது இந்த IGP கு மட்டும் தீவிர வாதிகளாம்! சபை சரவாக்கில் காரி துப்பியாச்சு ஒரு ….புடுங்க முடியல.
ஒரு நாட்டில் அகதிகள் என்றால் அரசியல் /வாழ்வியல் /மனிதவியல் காரணங்களாகும் அவர்களிடம் காசு இருக்க கூடாதா? என்ன தப்பு செய்தார்கள்.? சொல்லுடா முட்டாள்.
3 லட்சம் தமிழர்களை கொலை செய்த ராஜபக்சேவை அவர்கள் கூட்டத்தை வரவேற்று பச்சோந்தி நாடகம் ஆடுகிறீர்கள் பாவம் அகதிகளை புடித்து வேசம் போடுகிறீர்கள் ? பாவிகளா?
இந்த நாட்டில் நம் நிலையே bn அரசங்கத்தால் மிக கேவலம் பட்டு இருக்கிறோம் இதில் இவர்கள் நிலையே எப்படி நினைத்து பார்ப்பது பவம் நம் இனம் எங்கும் இருந்தாலும் இதே நிலைமைதான்
Indians are trespassers and ‘pendatangs’ Dont question the Tuans! Ketuanan Melayu is Malaysia!
நமக்கென்று ஒரு நாடு இருந்தால் இந்த துன்பம் ஏன்? எப்பொழுது விடியுமோ தமிழனின் இருள் காலம் ??
உலகத்தின் ஒவ்வொரு இடுக்கிலும் தமிழன் அடிபடுகிறான் .. கேட்க நாதியில்லை .. திருப்பி அடிப்பது எப்பொழுது? நமக்கென்று ஒரு நாடு கிடைப்பது எப்பொழுது ??
தனி நாடு என்று போராட வேண்டாம்,இது தான் என் நாடு என்று போராடுவோம் .இது தான் உண்மை .
தனி தமிழ் அவசியம் என்பதை அனைவரும் அறிவர்.தமிழ் நாடு மக்கள் மனது வைத்தால் தனி தமிழ் நாடு அமைத்து உலகதமிலர்களை காப்பாற்ற முடியும்.
தனி தமிழ் நாடுதான் என் நாடு என்று போராடுவோம். தமிழர் உணர்வு அல்லாத நாடு இருந்தென்ன, இறந்தென்ன?.
தமிழன் வாயால் கெட்டவன் அல்ல. அவன் வாயால் கேட்டதால்தான் இன்று இந்நாட்டிலும் பலர் அதன் பயனில் குளிர் காய்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்று கேட்போம். இன்று கனவு காண்போம். நாளை கேட்டது கிடைக்கும் பொழுது கனவு நிஜமாகும். ஐரோப்பாவில் போஸ்னியா, குரோஷிய நாடுகளிலும், முன்னாள் சோவியத் ரஷியாவின் குடியரசிலும் அவரவர்களுக்கு என்று நாடுகள் உருவாகவில்லையா?. அது நடந்ததும் கடந்த 20-ம் நூற்றண்டிலேயே. இன்று ஆந்திரப்பிரதேசம் தெலுங்கான, ராயல சீமா என்று உருவாகவில்லையா?. ஏன் இவர்கள் “நம் நாடு” என்று நினைக்கவில்லை? ஆள்பவனுக்கு ஒரு பகுதி மக்களை நம்மவர்கள் என்று மனதளவில் நினைக்க முடியவில்லையோ அன்றே புதியதோர் நாடு தோன்றும். இது வரலாறு காட்டும் உண்மை.
பாகீஸ்தான் தீவிரவாதிகலை கண்டால் ரகசியமாக தப்பி போக விடுவான் காரணம் மதம் !மதம் !!மதம் !!!தமிழன் இளைச்சவன் இவனுக்கு “ஹீரோ ” என்று நினைப்பு இவன் “சீரோ தான்!!!!!!!!!!!!!!
thamilachi – நமக்கு நாமே எதிரிகள் –காட்டிகொடுக்கும் கூட்டம் நாமே – திருவள்ளுவரிலிருந்து அவ்வையிளிருந்து கம்பனில் இருந்து பாரதியிலிருந்து நமக்கு எவ்வளவோ இருக்கின்றது ஆனால் இதை எல்லாம் புரிந்து நாம் எல்லாரும் ஒரேஇனம் என்றும் நம் மொழி தமிழ் மொழி என்றும் அதை எப்படி ஒழுங்காக பேசவேண்டும் என்றும் எத்தனை தமிழர்கள் உண்மையிலேயே விரும்புகின்றனர்? குடியும் அத்துடன் மட்டரகமான ஜாதி உயர்வு தாழ்வு பேசியே நம்மைநாமே கெடுதுக்கொண்டிருக்கிறோம்–இப்படி இருக்கையில் இந்த நன்றி கெட்ட மலாய்க்காரன் களுக்கு என்ன வேர்த்தா வடிகிறது? எந்த தமிழன் இன்னொரு தமிழனைப்பார்த்து புன்னகை செய்கின்றான்? எதிரியாகத்தானே பார்க்கின்றான்? இன்னும் எவ்வளவோ— எனக்கும் சீ என்றாகிவிட்டது–என்றுதான் நம்மினம் தேறுமோ.
இந்த மலைக்காரன் கூட்டம் என்றுமே நம்மை கிழே போட்டு மிதிக்கவே விரும்பும் அத்துடன் ஒருகாலத்தில் நம்மவர்கள் நல்ல பதவிகளில் இருந்தனர் அதெல்லாம் போய் இன்று ஒன்றுமில்லா பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுளோம் -ஏன்? எல்லாம் புரிந்திருந்தும் நம்மவர்கள் இன்றும் இந்த மலாய்க்காரனே மேலே இருக்க வாக்கு போட்டு கொண்டிருக்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன் இவன்களின் நிலை என்ன>? சம்பந்தன் மாணிக்கா சாமி இன்று பழனி –இப்படிப்பட்ட கையாலாகாத இனத்த்ரோகிளை தலைவனாக கொண்டிருந்தால் என்று நமக்கு விடிவு? டேவிட்- போன்றவர்கள் எவ்வளவோ செய்தும் இன்று அவரின் நினைவே இல்லாமல் இருக்கும் இனம் நம்மினம். அதிலும் என்று நம்மினம் குடியில்லாமல் நல்ல புத்தியுடன் முன்னேறினால் தான் நம்மை மற்றவங்கள் மதிப்பார்கள்.
சொல்வது நியாயம்தான்.. ஒரு தமிழன் இன்னொரு தமிழனை பார்த்தாலே ஏதோ பார்க்க கூடாததை பார்த்த மாதிரி பார்க்கிறார்கள்..
மற்ற இனத்தவரிடம் இருக்கும் இனவெறி , ஒற்றுமை ஏனோ நம்மிடத்தில் இருப்பதில்லை ..
செல்லமா குடுத்தான் பாரு ராஜபக்சி கூவ