மகிந்தவை சந்தித்துப் பேசினார் மோடி

mahinda_modi_002தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று முற்பகல் இந்தியப் பிரதமர் பணியகத்தில் பணிகளைப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அதையடுத்து வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று முற்பகல் 10.47 மணியளவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பேச்சுக்கள் தொடர்பான விபரங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இலங்கை – இந்திய தலைவர்களுக்கு இடையிலான இந்தச் சந்திப்பு இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, ஜனாதிபதி மகிந்த இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, மோடியின் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்ததுடன், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களையும் அனுப்பவில்லை.

TAGS: