பேராக் சுல்தான் ராஜா அஸ்லான் முஹிப்பிடின் ஷா இன்று காலமானார். அவருக்கு வயது 86.
இதனை அறிவித்த மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிர், சுல்தான் பிற்பகல் மணி 1.30க்கு கோலாலும்பூர் தேசிய இருதயக் கழகத்தில் உயிர்நீத்தார் என்று கூறினார்.
அவரது உடல், கோலா கங்சார் கொண்டு செல்லப்பட்டு அங்கு அரச கல்லறையில் அஸார் (பிற்பகல்) தொழுகைக்குப் பின்னர் அடக்கம் செய்யப்படும்.
சுல்தானின் இறப்பையொட்டி நாளை பேராக்கில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் துக்கம் கடைப்பிடிப்பதால் ஏழு நாள்களுக்கு, ஜூன் 4-வரை, பொழுதுபோக்கு அம்சங்கள், கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டா.
நல்லவனுக்கு மத்துமே அனுதாபம் அநீதி செய்பவனுக்கு முடியாது செய்தவனுக்கும் முடியாது
இவன் செட்டல் தமிழன் என்ன லாபம் ?