கிளிநொச்சி மாவட்டம் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்த ஒரு மாவட்டம். அந்த மாவட்ட மக்களுடைய உரிமைக்கான குரலை நசுக்க சிறிலங்கா அரசாங்கம் கடுமையான பிரயத்தனம் எடுத்திருப்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பென்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்ப இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:-
இன்று கிளிநொச்சியில் நடைபெற்றதைப் போன்ற கவனயீர்ப்பு போராட்டங்கள் நாங்கள் வீர வசனங்கள் பேசுவதற்கான களம் அல்ல. எங்கள் தமிழ் மக்கள் தங்களுடைய மூச்சைக் கூட வெளியில்விட முடியாதளவிற்கு நசுக்கப்படுகின்றார்கள். சிறிலங்கா அரசாங்கத்தினால் தமக்கு செய்யப்படும் அநீதிகளை சர்வதேச மட்டத்திற்கு மட்டமல்ல உள்ளுர் மட்டத்திலும் வெளிப்படுத்த முடியாதளவிற்கு நசுக்கப்படுகின்றார்கள். இவற்றில் குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பெரிதளவில் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள்.
ஊதாரணமாக பரவிப்பாஞ்சான் மக்கள் தமக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை வெளிப்படுத்துவதற்கு கடந்த 5வருடங்களாக முயற்சித்தபோதும் அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை. அவர்கள் வெளிப்படுத்த முற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவர்களுடைய குரல்வளை நசுக்கப்பட்டதை அவர்கள் எம்மிடம் கூறியிருக்கின்றார்கள்.
ஆனாலும் நாங்கள் எமது கட்சி சார்பாக அம்மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவர்களுடைய பிரச்சினையை வெளிப்படுத்த முன்வந்தோம். இருப்பினும் எமக்கும் பல கடுமையான நெருக்குவாரங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டது.
இருப்பினும் அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்புவதற்கு முன்வந்த மக்கள் உன்மையில் பாராட்டப்படவேண்டியவர்கள். குரல் நசுக்கப்பட்டிருக்கும் அவர்களுக்காக நாங்கள் குரல்கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மேலும் எம்மைப் பொறுத்தவரையில் உள்ளக அரசியல் ரீதியான மாற்றங்கள் உருவாக்கப்படாமல் இத்தகைய மக்கள் போராட்டங்கள் சர்வதேசத்திற்கு, தகவலைச் சொல்லுவதுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுவிடும்.
எனவே உள்ளக அரசியல் ரீதீயான மாற்றங்கள் உருவாக் கப்படாமல் இத்தகைய மக்கள் போராட்டங்கள் வெறுமனே சர்வதேசத்திற்கு தகவல் சொல்வதுடன் நின்றுவிடும் என்பதே உன்மையாகும். மேலும் நான் முன்னர் கூறியதைப்போன்று வன்னி மாவட்டம் என்பது மற்றய மாவட்டங்களுடன் ஒப்பிட கூடியதொரு மாவட்டம் அல்ல. அது ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்த ஒரு மாவட்டம்.
எனவே அந்த மாவட்ட மக்களுடைய உரிமைக்கான குரலை நசுக்க அரசாங்கம் கடுமையான பிரயத்தனம் எடுத்திருப்பதை நாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். மேலும் எங்கள் கட்சியின் கிளி.மாவட்ட அமைப்பாளர் nஐகதீஸ்வரன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
உன்மையில் அவர் செய்திருக்க கூடிய குற்றம் நிலத்தை இழந்து அனாதைகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் பரவிப்பாஞ்சான் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கான போராட்டத்தை நடத்த முனைந்தது மட்டுமே. எனவே அவருடைய விடுதலைக்காக சட்டரீதியான நடவடிக்கைகளையும், சர்வதேச மட்டத்தில் எடுக்கக்கூடிய நடவடிக்கைளையும்.
எங்கள் கட்சி நிச்சயமாக எடுக்கும். அவர் மீதான மோசமான பொய்க்குற்றச்சாட்டை சிறீலங்கா அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும். உலகம் ஏற்றுக்கொண்ட ஐனநாயகத்திற்கு சிறீலங்கா அரசாங்கம் தமிழர் தாயகத்தில் சுதந்திரம் கொடுக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
ஸ்ரீ லங்க அரசுக்கு neram