மக்கள் சுல்தான் அஸ்லான் ஷாவுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்

sulகாலஞ்சென்ற  பேராக்  சுல்தான்  சுல்தான்  அஸ்லான்  ஷாவுக்கு  இறுதி  மரியாதை  தெரிவிப்பதற்கு  ஆட்சியாளர்கள்,  நாட்டின்  பெருமக்கள், வெளிநாட்டுத்  தூதரக  அதிகாரிகள்,  பொதுமக்கள்  எனப்  பலரும்   கோலா  கங்சார்  இஸ்தானா  இஸ்கண்ட்ரியா  வளாகத்தில்  திரண்டுள்ளனர்.

காலை  மணி  8.30க்கே  மக்கள்  வரத்  தொடங்கி  விட்டனர். அரை  மணி  நேரம்  கழித்து  அவர்கள் பாலாய்  ரோங்ஸ்ரீ(சிகாசன மண்டபம்)க்குள்  சுல்தானுக்கு  இறுதி  மரியாதை  தெரிவிப்பதற்கு  அனுமதிக்கப்பட்டனர்.

சுல்தானின்  உடல்  அரண்மனையின்  சிங்காசன  மண்டபத்தில்,  சிங்காசனத்துக்கு  எதிரில்  கிடத்தி  வைக்கப்பட்டுள்ளது.