பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் ஷா, பேராக்கின் புதிய சுல்தானாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இன்று கோலா கங்சார், இஸ்தானா இஸ்கண்டரியாவில் உள்ள பாலாய் ரோங்ஸ்ரீயில் (சிங்காசன மண்டபம்) ஓராங் காயா பெண்டஹாரா ஸ்ரீ மகராஜா ஜெனரல் (பணி ஓய்வுபெற்ற) முகம்மட் ஜஹிடி சைனுடின், காலஞ்சென்ற சுல்தானை அடக்கம் செய்வதற்குமுன் இதனை அறிவித்தார்.
ராஜா நஸ்ரினை சுல்தானாக நியமனம் செய்வது என டேவான் நெகாரா பேராக் நேற்று நடத்திய ஒரு சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக பெர்னாமா கூறியது.