புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் மீறியதற்காக இந்தியர்கள் தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் கண்டிப்பாக பிஎன்னைத் தண்டிப்பார்கள் என இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறினார்.
தங்களின் சமூக- பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்தப்போவதாக சொல்லி ஏமாற்றிய பிஎன்மீது தங்களுக்குள்ள ஆத்திரத்தை இந்தியர்கள் இடைத் தேர்தலில் வெளிப்படுத்துவர்.
இந்தியர்களில் 65 விழுக்காட்டினர் டிஏபி வேட்பாளர் டியானா சோபியா முகம்மட் டாவுட்டுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்பது தம் இயக்கத்தின் கணிப்பு என்று வேதமூர்த்தி கூறினார்.
தெலோக் இந்தான் இந்திய வாக்காளர்கள் பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்கள் என்றும் கடந்த இரண்டு தலைமுறைகளாக தோட்டங்கள் மேம்பாட்டுப் பணிக்காகக் கையகப்படுத்தப்பட்டதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார்.
இதை தன் நானும் நன்புகிறேன் .பரிசனுக்கு மானம் போக போகுது.இதற்க்கு காரணம் இனவெறி அமைச்சர் அஹ்மட் சஹிடியும் மேலவதி தமிழ் பள்ளியை எமற்றியா பழனி வேல் தான்
இந்தியர்களை வைத்து அரசியல் விளையாட்டு வேண்டாம். நாங்கள் கெஞ்சி கூத்தாடியபோது பிடிவாதமாக ஒப்பந்தம்போட்டு உறவாடியவர்கள் நீங்கள்.உங்கள் காரியம் நினைத்தவாறு நடக்கவில்லை எனும்போது மீண்டும் இந்தியர்களை வைத்து அரசியல் விளையாட்டை ஆரம்பிக்கிறீர். தோட்டப்புற இந்தியர்கள் பாவமையா. தேர்தல் சமயத்தில் அவர்களை வைத்து காய் நகர்த்தாதீர். அவர்களுக்கு எப்படி வாக்களிப்பது என்று யாரும் பாடம் நடத்த வேண்டாம்.
தங்கள் கணிப்பு தேவை இல்லை. தங்கள் நேர்மையை (இருந்தால்) களத்தில் இறங்கி காட்டுங்கள்.
MIC காரனை காயடி அந்த அடி இந்த அடி தெலுக் இந்தன் தமிழ் மக்கள் கொடுத்து BN க்கு செருப்படி கொடுக்க வேண்டும்
BNனோடு ஒப்பந்தம் போட்டதோடு இண்டராப் காலாவதியாகி விட்டது. அது இந்தியர்கள் அரசியல் எதிர்காலம் குறித்த எந்த கருத்தும் சொல்லும் அருகதையை இழந்துவிட்டது. இண்டராப் ஆரம்பம் முதல் கடைசிவரை பல தன்மூப்பான தவறுகளைச் செய்து தன் தலையில் தானே மண்னை வாரி போட்டுக்கொண்ட ஒரு அமைப்பு. அது மலேசிய இந்தியர் அரசியலில் எதிர்கால சந்ததியினருக்கு தவறான முன்னுதாரன அமைப்பாகவே அடையாளம் காணப்படும்.
தேர்தல் , இடை தேர்தலுக்கு மட்டும் குரல் கொடுக்கும் பச்சோந்திகள் ! தமிழன் , பினாங்குகாரன் கருத்துக்கள் வரவேற்கிறேன் !
இலங்கை அரசின் அணுகுமுறையை பயன்படுத்துகிறார்களோ.?உலகை ஆண்ட பெர்ய இனம்,வகுப்பு வாரியாக ஓட்டுக்காக பிரித்து மேயப்படுகிறது.
கடைசி நேரத்தில் சாப்பாடு பொட்டலம் கொடுப்பார்களே ,இந்திய காரர்களுக்கு ,அப்புறம் என்ன ஒட்டு பாரிசானுக்கே
வேத்கமூர்ட்டி வாய் மூடு. போதும் உனது நாடகம். மக்கள் தெளிவாக உள்ளனர். உன்னை போல் பச்சோந்தி அல்ல தெலுக் இந்தான் மக்கள்.யாருக்கு வாக்களிக்க வேண்டும் அவர்களுக்கு தெரியும். நஜிப் கொடுத்த பணத்தோடு வாய் மூடு.
வேதமூர்த்தியும் ஏமாற்றப்பட்டார் என்பதுதான் உண்மை.அவர் மா,இ,கா. அடிமைகள் போல் அம்னோவிடம் கைகட்டி,வாய்மூடி இருந்து வாழ்க்கை நடத்தி இருக்கலாம். மக்கள் முன்னிலையில் பொது மன்னிப்பு கோரிய நம்பிக்கை மோசடிகாரன் மக்கள் முன்னிலையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தையே மதிக்காததால் நம்பிக்கை நாயகனின் உண்மையான குணத்தை அறிய நமக்கு கிடைத்த வாய்ப்பாகும். மேலும் அமனோவிடம் நாம் கற்றுக்கொண்ட பாடமும் கூட. ம.இ.கா. போல் தற்பொழுது ஐ.பி.எப். தெலுக் இந்தானில் நிலம் வழங்கப்படும் என்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. கவனம் வாக்காளர்களே.கவனம்.