அரசக் கட்டமைப்பை, அதிலும் குறிப்பாக காலஞ்சென்ற பேராக் சுல்தான் அஸ்லான் முஹிப்புடின் ஷா-வை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டோரை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம்(எம்சிஎம்சி) தேடி வருகிறது.
“அவர்களை அடையாளம் காண முயன்று வருகிறோம். தகவல் அறிந்த பொதுமக்கள் எங்களுக்கு உதவ வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்”, என ஆணையத் தலைவர் ஷரில் தர்மிஸி கூறினார்.
அவ்விவகாரத்தை எம்சிஎம்சி கடுமையாகக் கருதுகிறது என்றும் சம்பந்தப்பட்டவர்கள்மீது தொடர்பு, பல்லூடகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.