பதின்ம வயது பெண்ணிடம் பாலியல் வல்லுறவு: மஇகாவும் டிஏபியும் கண்டனம்

mohanaகிளந்தான்,  கெதேரே-இல்  பதின்ம  வயது  பெண்  38  பேரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை  மஇகா  மகளிர்  அணியும்  டிஏபி  மகளிர்  அணியும்  கண்டித்துள்ளன. இப்படிப்பட்ட  கொடூரச்  செயல்களை  ஒடுக்க  உடனடி  நடவடிக்கை  எடுக்க  வேண்டும் என்றும்  அவை  வலியுறுத்தின.

பெண்களுக்கு  எதிரான  வன்முறை  பெண்கள்  சம்பந்தப்பட்ட  விவகாரம்  மட்டுமல்ல  அது  ஒரு  மனித  உரிமை  பிரச்னை  என  மஇகா  மகளிர்  தலைவர்  மோகனா  முனியாண்டி  கூறினார்.

“இப்படிப்பட்ட  குற்றச்செயல்களுக்கு  முடிவுகட்ட  வேண்டும்-பாலியல்  தொல்லைகளையும் வன்செயல்களையும்  பொறுத்துக்  கொள்வதற்கில்லை”,  என்றாரவர்.