இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு: பிரித்தானியா உறுதி

daniel_painter_001மனித உரிமைகளை மதித்து, அர்த்தமுள்ள நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கவும் தமிழ் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் அரசியல் தீர்வுக்கான இணக்கத்தை ஏற்படுத்த இலங்கையை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கையின் வளமான அபிவிருத்திக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருகிறது என கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் குழு பிரதானி டனியல் பெயிண்டர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி என்பன பேச்சுவார்த்தை மூலமான நல்லிணக்கம் தொடர்பில் நம்பிக்கையான எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

துரதிஷ்டவசமான பின்னர் இந்த நம்பிக்கை பொய்த்து போனது. எனினும் இலங்கையில் சமாதானத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்.

வடக்கில் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அங்கு பொருளாதார வாய்ப்புகள் இல்லாததால் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் உண்மையான சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் பெயிண்டர் கூறியுள்ளார்.

TAGS: