தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை என்றும் அடுத்த மாத இறுதிப் பகுதியில் அல்லது ஜுலை மாதத்தின் நடுப்பகுதியிலேயே இது சாத்தியமாகும் என்றும் இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில் அவரை உடனடியாகச் சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையிலேயே இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திரமோடி கடந்த 26 ஆம் திகதி பதவியேற்றிருந்தார்.
அதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் உடனடியாக சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!