இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது இந்த முரண்பாடுகள் ஆரம்பித்ததாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இந்திய பிரதமருடனான முதல் சந்திப்பின்போது ஜனாதிபதியுடன் அவருடன் இலங்கையில் இருந்து சென்ற அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இதன்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்செய்வது, நல்லிணக்கம் மற்றும் சம்பூர் அனல் மின்சார நிலையத்திட்டம் போன்ற விடயங்கள் குறித்து மோடி தமது வலியுறுத்தல்களை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் ஜனாதிபதி இலங்கை திரும்பியவுடன் மேற்கொண்ட நடவடிக்கைகள் மோடியுடனான பேச்சுவார்த்தையின் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தற்போது 13வது திருத்தத்தை பொலிஸ் அதிகாரம் அற்ற நிலையில் அமுல்செய்யக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் சம்பூர் அனல் மின்சார நிலையத்தின் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இவையாவும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முரண்பாடுகளை சுட்டி நிற்பதாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரமின்றி ஏனையவற்றை வழங்க முடியும்!- இலங்கை
பொலிஸ் அதிகாரமின்றி ஏனையவற்றை வழங்க முடியும் என இலங்கை அரசாங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனையவற்றை வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரங்கள் வழஙக்ப்பட்டால் பொலிஸ் திணைக்களமே சீர்குலைந்துவிடும்.
ஒன்பது மாகாணங்களுக்கும் தனித்தனியான பொலிஸ் அலகுகளை உருவாக்குவதன் மூலம் இனவாத முரண்பாடுகள் ஏற்படக் கூடும்.
13ம் திருத்தச் சட்டத்தின் ஏனைய விடயங்களை வட மாகாணசபைக்கு வழங்க முடியும்.
வடக்கில் தற்போதே உயிரிழந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
இவ்வாறான ஓர் நிலையில் பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் பாரிய பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என அரசாங்கம் இந்தியாவிடம் அறிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்றின் ஞாயிறு இதழ் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் ஈழம் அமைத்தால் மட்டுமே நாங்கள் தமிழர்கள் (உலக )இந்தியாவை நம்புவோம்
ஸ்ரீ லங்கா இந்தியாவுக்கு ஆப்பு அடித்துக்கொண்டு இருக்கிறான் ,அவனுக்கு சமாதி கட்டுங்கள்