அரசின் மீள் குடியேற்றம் உதட்டளவில்! நில ஆக்கிரமிப்பு உச்ச கட்டத்தில்

baskara_001கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி ஏற்பாடு செய்திருந்த நில ஆக்கிரமிற்கு எதிரான பேராட்டத்தில் அரசின் நிலவிடுவிப்பு என்பது உதட்டளவிலும், நில ஆக்கிரமிப்பு நிஜமாகவும் நடைபெறுவதாகவும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான சி. பாஸ்கரா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்ட ஒன்றே பொதுமக்கள் காணியில் இருந்து படிப்படியாக இராணுவம் விலக வேண்டும் என்பது. ஆனால் இராணுவம் அதற்கு எதிர்மாறாக மேலும் பொதுமக்கள் காணிகளை சுவீகரிப்பதாகவே உள்ளது.

அரசு ஆனது வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கும் போது உடனடியாக மீள் குடியேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது. இது அவர்களுடன் சந்திக்கும் உதட்டளவு உத்தரவாதம் மட்டுமே. நடைமுறையில் எள்ளளவும் இல்லை நிலஆக்கிரமிப்பே நிஜம் அதுவே நடைபெறுகின்றது.

நல்லிணக்கம் என்பது அரசின் சார்பான தனக்கு வசதியான ஒருபக்கமாகவே நடைபெறுவதாக உரையாற்றும் போது குற்றம் சாட்டினார்.

வடமாகாண முதலமைச்சர் தனது சத்தியப் பிரமாணம் முதல் பல தடவைகள் நல்லிணக்க செய்திகளை சொல்லில் அல்லாமல் செய்தே காட்டியுள்ளார். அரசோ அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காது மேலும் முதலமைச்சரின் செயற்பாட்டுக்கு இடையூறு செய்கின்றது.

தடை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. மேலும் இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தனக்கு கவசமாக வடமாகாண முதலமைச்சரை அழைத்தது அரசு கபடத்தனமாக நல்லவேளை முதலமைச்சர் செல்லவில்லை.

நல்லகாலம் முதலமைச்சர் அரசுக்கு அதில் நல்லெண்ணம் காட்டமுயலவில்லை அவரின் நல்லகாலம்.

கௌரவ பிரதமர் மோடியை சந்தித் தபோது மீள்குடியேற்றம் பற்றி நல்லிணக்க சந்திப்பில் முதல் பேச்சில் கௌரவ இலங்கை ஜனாதிபதி பேசிய விடயங்கள் இந்திய பிரதமர் செயலகத்தால் மீள் குடியேற்றம் பற்றியும் 13வது திருத்தச் சட்டம் பற்றியும் வெளியிடப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி செயலகத்தால் இது சம்மந்தமாக எதுவும் வெளியிடப்படவில்லை. இது நல்லிணக்கத்தின் மேலும் ஒருபடி உச்சநிலை உதட்டளவில்தான் மீள்குடியேற்றம் என்பதை மீண்டும் பறைசாற்றும் நிகழ்வு.

மேலும் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை கைது செய்வதிலும் அவர்களை மௌனிப்பதிலும் அரசின் கவனம் செல்வது அரசின் கபடத் தன்மையின் உச்சகட்டம் என தெரிவித்தார்.

தொடர்ந்து நில ஆக்கிரமிக்கு எதிரான இந்த த.தே.ம.மு ஏற்பாடு செய்த நில ஆக்கிரமிப்புக்கு எதிரான அகிம்சை போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஜெகதீஸ்வரனின் கைது செய்யப்பட்டதைக் கண்டிப்பதுடன் உரிமைக்காக குரல் கொடுக்கும் கிறிஸ்தவ குருவானவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் பொய்க் குற்றச் சாட்டுக்கள் சோடிக்கப்படுவதையும் கடுமையாக கண்டிப்பதாக பாஸ்கரா தெரிவித்தார்.

TAGS: