கொபி அனான், புலிகளின் கிழக்குத் தலைவரின் மறைவிற்காக இரங்கல் செய்தி அனுப்பியவர்!– திவயின

kofi-annanஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான், தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குத் தலைவர் உயிரிழந்த போது இரங்கல் செய்தி அனுப்பி வைத்தவர் என திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் கௌசல்யன் உயிரிழந்த போது, அனான் இரங்கல் செய்தி அனுப்பி வைத்துள்ளார்.

பயங்கரவாதத் தலைவர்களில் ஒருவரான கௌசல்யனின் மறைவிற்காக ஐக்கிய நாடுகள்; அமைப்பின் செயலாளர் நாயகம் இரங்கல் செய்தி அனுப்பி வைத்தமை சர்ச்சைக்குரியது என திவயின சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான ஓர் நபரே, இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகளுக்கு தலைமை தாங்க உள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே, கொபி ஆனான் தலைமையிலான குழு மேற்கொள்ளும் இந்த விசாரணைகளின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என திவயின தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை! தலைமைப் பொறுப்பை ஏற்கமாட்டார் கோபி அனான்!

சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணையின் தலைமைப் பொறுப்பை முன்னாள் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் கோபி அற்றா அனான் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கொபி அனான் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளராக இருந்தவர். ஆனால் இந்த விசாரணையின் அறிக்கை, அவருக்கு கீழ் பணியாற்றிய மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட வேண்டும்.

எனவே இதனை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அதேவேளை இந்த விசாரணைக்கான தலைமையை, தற்போதையை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே ஏற்றுக் கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் இன்னும் ஓரிரு மாதங்களில் மனித உரிமைகள் ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஏற்கனவே சிறிலங்காவுக்கு எதிராக விசாரணை நடத்தி இருந்த மர்சூகி தருமான் அந்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

இந்த நிலையில் நவநீதம்பிள்ளையே சிறிலங்காவுக்கு எதிரன விசாரணை குழுவுக்கு தலைமை வகிப்பார் என்று கூறப்படுகிறது.

TAGS: