இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்கப் போவதில்லை – ரம்புக்வெல

keheliyaதமக்கு எதிரான விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்ற முடிவில் அரசாங்கம் பின்வாங்கப் போவதில்லை என்று, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான விசாரணைக்காக 13 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது தொடர்பில் கண்டியில் இடம்பெற்ற குறித்த செய்தியளர் சந்திப்பின் போது வினவப்பட்ட போது, ஏற்கனவே இந்த விசாரணைக்கான யோசனையை அரசாங்கம் நிராகரித்து விட்டது.

இந்த நிலையில் அது குறித்து கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்படவிருப்பதாக கூறப்படும் கொபி அனானுக்கு வீசா வழங்குவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: