பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சற்றுமுன் நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியை சந்திக்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை டெல்லி வந்தார்.
காலை 11 மணிக்கு டெல்லி வந்த ஜெயலலிதா, தமிழ்நாடு இல்லம் சென்றார். அவருக்கு மோடியை சந்திக்க பகல் 1 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி செல்ல நேரிட்டது.
இதன்காரணமாக மோடி – ஜெயலலிதா இடையேயான சந்திப்பில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே ஏற்கனவே குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிற்பகல் 2.45 மணிக்கு சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி அளவில் பிரதமர் மோடியை ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, தமிழகத்திற்கு தேவையான நிதிகள், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம், ஜெயலலிதா கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
மேலும், தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் மின்வெட்டு இருக்காது என முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே, அறிவித்து இருக்கிறார். எனவே, இனிமேல் மின்வெட்டை சமாளிப்பதற்காக தமிழகத்திற்கு அதிக அளவில் மின்சாரம் வழங்கவும் மோடியிடம் கோரிக்கை விடுத்து, தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் அவர் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ம் இணைப்பு
தனி ஈழத்துக்கான கருத்துக் கணிப்பை ஐநாவில் வலியுறுத்த ஜெயலலிதா கோரிக்கை
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் ஜெயல்லிதா, இலங்கை, தமிழகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார்.
இலங்கை பிரச்சினை குறித்து, அக்கடிதத்தில். ஜெயலலிதா,
- இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்து ஐநாவில் இந்தியா கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்,
- தனித் தமிழ் ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்த வேண்டும்,
- பாக் நீரிணையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளையும் அவர்களது பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும்,
- 1974, 76ஆம் வருட ஒப்பந்தங்களை மத்திய அரசு ரத்துசெய்து, கச்சத்தீவை மீட்க வேண்டும்,
என்றெல்லாம் கோரியிருக்கிறார்.
தமிழர்களின் லட்சியம் நிறைவேற முயற்சி எடுக்கும் அம்மா அவர்களுக்கு நன்ற்களும் பாராட்டுகளும்.இது காலத்தின் கட்டாயம்.இல்லையேல் தனி தமிழ் நாடு அமைத்து அங்கே ஈழம் உருவாக போராடுவோம்.
விடுதலை புலிகளின் சில செயல்களுக்கு எதிரானவர் ஆனால் அவர்களின் விடுதலை போராட்டதிற்கு தமிழக முதல்வர் எதிரானவர் இல்லை
தமிழா ஏமாந்து விடாதே, தமிழக முதல்வர் சட்ட மன்ற தேர்தலுக்கு தயாராகிறார். மறந்தும் ஏமாந்து விடாதே.
இதை தமிழ் “ஈன தலைவர் கலைஞர்” ( தெலுங்கர் ) செய்யவில்லை ! கன்னட அம்மா முன்னெடுக்கிறார் , நல்லது நடந்தால் நல்லதுதானே தோழரே ? இனி தமிழனை ஏமாற்ற முடியாது என்று அம்மாவுக்கு தெரியாமலா போகும் ?
தமிழ் ஈழம் என்ற ஆதிச்சொல், தமிழர்களின் சிந்தனையிலும் ,சித்தாந்தத்திலும் , ஒளிர்கின்றது ,மிளிர்கின்றது , தமிழ் சபையிலே, தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்று ,சிம்மமென முழங்கிய ,[தங்க தாரகை ,ஆம் கன்னடத்தி என்ற தமிழச்சியாம்] ,தமிழ் ஈழ விடுதலைக்கு ,நிறைகுடமாக ,சிந்தைமிகு பெண்மணியால் ஏற்றங்கள் பிறக்க ,இந்தியாவின் மீண்டும் இரும்பு மனிதரின் கரத்தினிலே ,ஒய்யாரமாய் தவில்கின்றதே,தமிழ் ஈழத்தின் நிறை விடியல் , ஈழத்தில் வசந்தங்கள் பிறக்க, மாற்றங்கள் உருவாகட்டும் , [ மலரட்டும் தமிழ் ஈழம் ].