போலீசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு எஸ்.தீபாவின் மகனை அவரிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர்துறை அமைச்சர் நன்சி ஷுக்ரி கூறியுள்ளார். ஏனென்றால், மகனைப் பராமரிக்கும் சட்டப்பூர்வ உரிமை தீபாவுக்கே உண்டு.
மகனைப் பராமரிக்கும் உரிமையை சிரம்பான் உயர் நீதிமன்றம் தாயாருக்கு அளித்த பின்னரும் தீபாவின் மதம் மாறிய கணவர் இஸ்வான் அப்துல்லா அவனைப் பலவந்தமாகக் கவர்ந்துசென்ற சம்பவம் பற்றிக் கருத்துரைத்தபோது நன்சி அவ்வாறு கூறினார்.
“போலீசார் தந்தையிடமுள்ள பிள்ளையை அழைத்துவந்து தாயாரிடம் சேர்க்க வேண்டும் என்பதே என் கருத்து”.
ஆனால், போலீசார் அவ்வாறு செய்யாதிருப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்றாரவர்.
ஆனால், போலீசார் அவ்வாறு செய்யாதிருப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்றாரவர்.
பிரதமர் துறை அமைச்சர்தானே நீங்கள்? ஐ ஜி பியிடம் நேரடியாக தொடர்புகொண்டு விளக்கம் அளித்திருக்கலாமல்லவா??? எவ்வளவு காலம்தான் இதே சங்கை ஊதிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்???? சட்டம் என் கையில் என்ற தீர்ப்பை மக்கள் எடுக்கும் காலம் நெருங்குகிறது போல் தோன்றுகிறது.. வைரத்தை வைரத்தால் வெட்ட வேண்டும் போலோ????
போச்சி! போ! MH370 விவகாரம் சம்பந்தமாக பிரதமர் நஜிப், சீனா சென்றுள்ளார். அவர் திரும்பி வந்ததும் அவரது அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய விருக்கிறார். இந்துவுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் நென்சி க்கு ஆப்பு!
தாயாரிடம் சேர்க்கும் போது மகன் இஸ்லாமிய மதத்தில் இருப்பானா அல்லது இந்து மதத்தில் இருப்பானா? இஸ்லாம் மதத்திற்கு மாறிய உடனையே அப்பன் வன்முறையைப் பயன்படுத்திவிட்டான். மகன் இஸ்லாமிய மத்தில் தொடர்ந்து இருந்தால் வருங்காலங்களில் அவன் எப்படி இருப்பான்? அவன் இந்து மதத்தில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
satdam athu yaar kaiyil ? yaar satdam poduvathu , yaraal niraivetrapadavendum ?
இந்த நாட்டில் சட்டத்தை அவர்கள் மதித்தால் தானே நைனா
நீங்கள் சொல்வது சரிதான்..! காவல் துறைதான் இஸ்லாமிய சமய மன்றத்துக்கு அடிபணிந்து கிடக்கிறதே எப்படி நடவடிக்கை எடுப்பாகள்..?நீங்கள் பிரதமர் துறையில் தானே அமைச்சராக இருக்கிறீர்கள் அவரிடம் சொல்லி பாருங்களேன்..?
நீதி மன்றம் தீர்ப்பை , புரியாத அதிகாரி பதவி விலகுவதே நன்று …!
இந்நாட்டை ஆளும் பரிசான் கட்சியில் அங்கத்துவம் பெற்றிருக்கும் இந்தியர் கட்சிகள் இந்துசமயத்தை பாதுகாக்க jabatan. indu..Malaysia.. என்ற அரசாங்க அங்கிகாரத்தை பெற்ற ஒரு இலாக்காவை அமைக்க முடியாமல் இருப்பது வெட்கப்பட வேண்டிய விடயம் .
ஆமாம், TI இடைத் தேர்தலுக்குப் பிறகு umnob ஆதரவு இந்தியக் கட்சிகள் இருக்குமிடமே தெரியவில்லையே…?! அவர்கள் அரசியல் கட்சிகளாக இயங்குவதின் அதிமுக்கிய காரணம் umnob-கு இந்தியர்களின் வாக்குகளை அதையும் இதையும் சொல்லி, காட்டி, கொடுத்து வாங்குவதுதானா..? (ஏன் இப்படி செய்கிறார்கள் என்று எல்லோருக்கும் நன்கு தெரியும்.) தேர்தல் நேரத்தில் பம்பரம்போல் சுழன்று இயங்கும் இவர்கள் உரிமைகள் பேச வேண்டிய நேரத்தில் இருக்கும் இடம் தெரியாமல், நாக்கருந்த ஊமைகளாகி விடுகின்றனரே? இந்தக் கட்சிகள் இருப்பதால் யாருக்கு நன்மை? இந்திய மக்களுக்கா அல்லது இதன் தலைவர்களுக்கா?