முதலமைச்சர் மூசா அமான், கட்சி நலனைவிட மாநில மக்களின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சாபா மாநில சீர்திருத்தக் கட்சி (ஸ்டார்) கூறியுள்ளது.
“அவர்(மூசா) அம்னோ பிரதிநிதி என்ற மனப்போக்கைக் கொண்டிருக்கக் கூடாது. அவர் சாபா மக்களின் தலைவர்”, என ஸ்டார் தலைவர் ஜெப்ரி கிட்டிங்கான் கூறினார்..
அந்த வகையில், மூசாவும் மாநில அரசும் தங்களை மாநில மக்களின் பிரதிநிதிகள் என்று நினைத்துக்கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
எண்ணெய்க்கும் எரிவாயுக்கும் கூடுதல் உரிமைப்பணம் கேட்டு சரவாக் முதலமைச்சர் அடினான் சதேம் விடுத்த கோரிக்கையைக் கவனிப்பதாக பிரதமர் நஜிப் அபதுல் ரசாக் உத்தரவாதம் அளித்திருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது ஜெப்ரி இவ்வாறு கூறினார்.
சபா , சரவாக் முதலமைச்சர்கள் மாநிலத்தை கவனித்து மக்களுக்கு நல்லது செய்து இருந்தால் இன்று அவ்விரு மாநிலங்களும் வளர்ச்சியும் முன்னேட்ரமும் கண்டு இருக்கும் அமைச்சர்கள் அவர்கள் வளர்ச்சியை வளர்த்துக் கொண்டார்கள்.
State CM’S did well for their people! who said NO ? but for one who belongs to a particular religion! For Sarawak, in 1970’s the state was totally difference from what is now! Era 70’s all for every community but now every thins for ….?? unless the other locals who belongs to Christians should wake up from their sleeping mode!!