சிங்கப்பூரைப் பின்பற்றி ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போடாதீர்: நஜிப்புக்கு அறிவுறுத்தல்

mpபிகேஆர்  உதவித்  தலைவர்  என்.சுரேந்திரன்,  மலேசியாகினிமீது  வழக்கு  தொடுக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  முயற்சியைச்  சாடினார். அது  மாற்றுக்குரல்களைக்  கட்டுப்படுத்தும்  அபாயகரமான  முயற்சி  என்றாரவர்.

நஜிப்  சிங்கப்பூரைப்  பின்பற்றக்கூடாது  என்று  அந்த  எதிரணி  எம்பி  கூறினார். அந்நாட்டுப்  பிரதமர்  எதிர்ப்புக்  குரல்  எழுப்பும்  ஊடகங்களை  எல்லாம்  வழக்கு  தொடுத்தே  ஒழித்து  விட்டார் இப்போது  அரசுக்குச்  சொந்தமான  ஓரே  ஒரு  ஊடகம்  மட்டுமே  மிச்சமுள்ளது.

“அந்நாட்டின்  நிலைமை  இங்கு  வேண்டாம். நமக்கு  மாற்றுக்குரல்கள், மக்களின்  குரல்கள்  தேவை”, என்று  சுரேந்திரன்  தெரிவித்தார்.