சுவா: தெலோக் இந்தான் வெற்றிக்கு லியோ காரணமா? சிரிப்புத்தான் வருகிறது

liowதெலோக்  இந்தான்  இடைத்  தேர்தலில்,  சீனர்களின்  வாக்குகள்  பிஎன்னுக்கு  ஆதரவாக  திரும்பி  இருக்கலாம்  ஆனால், அதற்கு  மசீச  தலைமைத்துவம்தான் காரணம்  என்பதை  ஏற்பதற்கில்லை  என்கிறார்  அதன்  முன்னாள்  தலைவர்.

கெராக்கான்  தலைவர்  மா  சியு   கியோங்  தொடர்ந்து  தம்  சொந்த  ஊரிலேயே  தங்கி  இருந்து  சேவையாற்றி  வருவதும்,  வாக்காளர்கள்  குறைந்த  எண்ணிக்கையிலேயே  வாக்களிக்க  வந்ததும்  அதற்குக்  காரணமாக  இருக்கலாம்  என  டாக்டர்  சுவா சொய்  லெக்  கூறினார்.

எனவே, அந்த  வெற்றிக்கு  மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாயின்  தலைமைத்துவம்தான்  காரணம்  அல்லது  சீனர்கள்  பிஎன்  பக்கம்  திரும்பி  வருவதுதான்  காரணம்  என்று  கூறப்படுவதைக்  கேட்டால்  சிரிப்புத்தான்  வருகிறது  என்றாரவர்.

எந்த  வேட்பாளரை  நிறுத்தினாலும்  சீனர்கள்  ஆதரிப்பார்கள்  என்ற  டிஏபி-இன்  தப்புக்கணக்கும், மா  வெற்றிபெற்றால்  அமைச்சராக்கப்படுவார்  என்ற  வாக்குறுதியும்துகூட  உதவி  இருக்கலாம்.

மற்றபடி,  “சீனர்கள்  பிஎன்னுக்குத்  திரும்பி  வருகிறார்கள்  என்று  பூரிப்படைய  நான்  தயாராக  இல்லை”,  என  சுவா  குறிப்பிட்டார்.