ஹிஷாம்: பிணையாளிகளின் விடுதலைக்குப் பணம் கொடுக்கவில்லை

hishamசெம்பூர்ணா  ஓய்வுத்தலத்திலிருந்து  கடத்திச்  செல்லப்பட்ட  சீனச்  சுற்றுப்பயணியையும்  பிலிப்பினோ  பெண்ணையும்  விடுவிக்க  பிணைப்பணம்  கொடுக்கப்படவில்லை  என்பதைத்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  உறுதிப்படுத்தினார்.

“ஒன்றுமே  கொடுக்கவில்லை  என்று  பிரதமர்  ஏற்கனவே  சொல்லியிருக்கிறார். அதுதான்  உண்மை.

“இது  ஒன்றும்  புதிதல்ல”, என்று  குறிப்பிட்ட  ஹுஷாமுடின், தாம்  முன்பு  உள்துறை  அமைச்சராக இருந்தபோதுகூட இப்படி  நடந்ததுண்டு  என்றார்.

கடத்தப்பட்டவர்களை  விடுவிக்க  ‘பெரும் பணம்’  கொடுக்கப்பட்டதாகக்  கூறும்  ராய்ட்டர்  செய்தி  பற்றிக்  கருத்துரைத்தபோது  அமைச்சர்  இவ்வாறு  கூறினார்.