கிழக்கில் கொல்லப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை!

mahinda_karunaaதமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1990ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் திகதி திருக்கோயில் காட்டுப் பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளினால்ää 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடாத்துமர்று ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை சரணடையுமாறு அப்போது பொலிஸ் மா அதிபராக பதவி வகித்தவர் உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுää

எனினும்ää இது பற்றிய தகவல்கள் மூடிமறைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவிற்கு அமைய புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான், பொலிஸ் உத்தியோகத்தர்களை கொலை செய்ததாக, அப்போதைய புலிகளின் கிழக்கு கட்டளைத் தளபதியும், தற்போதைய பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

TAGS: