எதிர்வரும் 10ம் திகதி இலங்கை குறித்த விசாரணைக் குழுவினை ஐக்கிய நாடு;கள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பெயரிட உள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி மனித உரிமைப் பேரவையின் சாதாரண அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. அதற்கு முன்னதாக விசாரணைக் குழு நியமிக்கப்பட உள்ளது.
இந்த விசாரணைக்குழு ஜெனீவாவில் இருந்து விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கிற்கு சென்று விசாரணை நடாத்த இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்காது என தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளில் சாட்சியமளிக்க 21 பேர் ஆயத்தமாகி உள்ளதாகவும், இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ததில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்றினை நவனீதம்பிள்ளை நியமிப்பார் என குறித்த சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அண்மையில் 13 பேர் அடங்கிய விசாரணைக் குழுவொன்றினை நியமிக்க உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.