இலங்கை: போரில் காணாமல் போனவர்கள் குறித்து 18,000 புகார்கள்

jaffna_protest_on_missing_personஇலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்க அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சவால் ஏற்படுத்தப்பட்ட குழு, பொதுமக்களிடம் இருந்து இதுவரையில் சுமார் 18,590 புகார் மனுக்களை பெற்றுள்ளது.

“”காணாமல் போன பாதுகாப்புப் படையினரின் உறவினர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள 5,000 புகார்களையும் சேர்ந்து, மொத்தம் 18,590 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன” என்று அந்த விசாரணைக் குழுவின் செயலர் எஸ்.டபிள்யூ. குனதசா கூறினார்.

ராஜபட்ச அமைத்துள்ள இந்த 3 நபர் குழு, கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 3 அமர்வுகளாக கிளிநோச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெற்றுள்ளது.

இதுவரையில் 462 புகார்கள் மீது, விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கான காலவரையறை இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே 1990ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி முதல் 2009ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி வரை நடைபெற்ற போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்க, இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

TAGS: