இலங்கையுடன் இந்தியா எந்த தருணத்திலும் முரண்பட்டுக் கொள்வதை விரும்பாது. யுத்தம் நிறைவடைந்த பின்னர், இலங்கையின் பல்வேறு தொழில்துறைகளில் இந்தியா கால்பதித்துள்ளது.
இந்தியாவின் நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் இலங்கையில் தொழில்புரிய தொடங்கியுள்ள நிலையில், இலங்கையுடனான உறவு இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாக அமைந்துள்ளது.
மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ தொடர்புகளும் வளர்ச்சி அடைந்து காணப்படுகின்றன.இந்த நிலையில் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்குள், தமிழீழம் சிறைப்பட்டு கிடப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.