ஐநா மனித உரிமைகள் பேரவை 26 வது அமர்வு! இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு!

chaloka_beyani_unஇலங்கையில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஐ.நா. வின் சிறப்பு அறிக்கையாளர் சலோகா பெயானியின் அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில், எதிர்வரும் 12ம் திகதி  இலங்கையில் போரினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த அறிக்கையை, ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கலாநிதி சலோகா பெயானி சமர்ப்பிக்கவுள்ளார்.

இவர், 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம்,2014  மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் தாம் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையிலும், 2013 டிசெம்பர் 2ம் திகதி தொடக்கம் 6ம் திகதி வரை இலங்கையில் பயணம் மேற்கொண்டு நடத்திய விசாரணைகளின் அடிப்படையிலும் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.

இவர் தனது  இலங்கைப் பயணத்தின் போது, கொழும்பு,. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆகிய இடங்களுக்குச் சென்று உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களைச் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS: