இனப்பிரச்சினை தீர்வுக்காக தமக்கு ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது
தனிப்பட்டவர்கள் மற்றும் குழுக்களிடம் இருந்து இந்த யோசனைகள் கிடைத்துள்ளதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை தாம் வரவேற்பதாக அறிவித்திருந்தார்.
இதன்மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு புதிய முனைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளன.
இந்த யோசனைகளுக்காக ஒரு மாதக் காலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.