ஈழம்: முள்ளிவாய்க்காலுக்குப் பின் 5 ஆண்டுகள்

முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து மே மாதத்தோடு அய்ந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இனப் படுகொலை நடந்த அந்த நிலத்தில் ஒரு தீபத்தை ஏற்ற அனுமதிக்க முடியாது என்று போர் வெற்றிக் கொண்டாட்டங்களை வெறித்தனமாக நடத்தி தோற்கடிக்கப்பட்ட ஒரு இனத்தை மிகவும் மோசமாக காயப்படுத்தியது ஸ்ரீலங்கா அரசு.

ஆனாலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களை உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். இலங்கை அரசின் முள்ளிவாய்க்கால் நாட்கள்மீதான கடுமையான நவடிக்கைதான் அந்த நாட்களை ஈழத்து மக்களை முள்ளிவாய்க்கால் நினைவுகளில் மூழ்கச்செய்தது.

Sri-Lankas-president-Mahi-001_CI

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பது அரசியல் ரீதியாக ஒரு மிகப் பெரும் அர்தத்தையும் கொடுக்கிறது. வரலாற்றில் மிகப் பெரிய செய்தியை கொடுக்கிறது. முள்ளிவாய்க்காலை எப்படி விளங்கிக் கொள்வது என்பது மிகவும் முக்கியமானது.

இலங்கை அரசின் இனப்படுகொலையின் உச்ச கொடூரமான முள்ளிவர்க்கால் படுகொலை, ஈழ மக்களை சிங்கள அரசுகள் எப்படி நடத்துகின்றன என்பதையும் எப்படி அழிக்கின்றன என்பதையும் ஈழ மக்களின் போராட்டத்திற்கு எப்படியான முறையில் பதில் அளிக்கின்றன என்பதையும் உணர்த்துகிறது.
முள்ளிவாய்க்காலுக்கு முன்னர்

இந்த இனப்படுகொலை ஏன் நிகழ்த்தப்பட்டது என்பதே வரலாறு மீது எழும் கேள்வி. இலங்கைத் தீவின் பூர்வீக இனம் ஈழத்தமிழினம். இலங்கையில் சிங்களவர்களுக்கு முன்பாகவே வாழ்ந்த ஈழத்தமிழினம் பிரித்தானிய ஆட்சியாளர்களினால் பலவந்தமாக ஒரு தீவாக இணைக்கப்பட்டது.

ஈழத் தமிழினம் இந்த தேசத்தின் பூர்வீக இனம் என்பதற்கான ஆதாரங்கள் நாடு முழுவதும்; இருக்கின்றன. ஈழத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பன்னெடுங்காலமாக யுத்தமும் முரண்பாடுகளும் நிலவிவந்தன. சிங்களவர்கள் காலவோடடத்தில் தெற்கில் நிலை கொண்டதுடன் தமது இனத்திற்கான அடையாளங்களை அங்கு உருவாக்கினர்.

அந்நியராட்சியில் ஈழம் சிங்கள தேசத்தோடு இணைக்கப்பட்டு சிலோனாக உருவாக்கப்பட்டதே ஸ்ரீலங்கா. பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தில் சிங்களவர்களைவிடவும் தமிழர்களே முன்னின்றனர். அதற்கு முன் தமிழர்களே இலங்கையின் பெரும் பொறுப்புக்களில் இருந்தனர். பிரித்தானியாவிடமிருந்து விடுதலைபெற்ற போது இந்த நாட்டை அவர்கள் முன்பிருந்தபடி பிரிக்க இணைந்தே வாழ்கிறோம் என்றது தமிழர் தரப்பே.

ஆனால் சுகந்திர ஸ்ரீலங்காவில் தமிழர்களின் உரிமைகளை வழங்காமல் எல்லாவற்றையும் தமக்குள் சுருட்டிக் கொண்டது ஸ்ரீலங்கா என்ற சிங்கள தேசம். ஈழமும் சிங்கள தேசமும் இணைக்கப்பட்டு ஸ்ரீலங்கா உருவாக்கப்பட்டபோதும் சிங்கள தேசமே ஸ்ரீலங்காவாக இருந்தது. அது சுதந்திரற்குப் பின்னர் ஈழம் என்ற தேசத்தையும் இனத்தையும் அழிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியது.

இனப்படுகொலைகளுக்கான தொடக்கங்களான முரண்பாடுகள் சுதந்திரற்கு முன்பு தொடங்கிவிட்டது. முள்ளிவாய்க்காலில் உச்சம் கொண்ட இனப்படுகொலை என்பது 1950களிலேயே ஆரம்பித்துவிட்டது. சுதந்திர ஸ்ரீலங்கா ஈழத் தமழிர்களை அடிமைப்படுத்தி அழித்து ஒழிக்கும் நாடானது என்பது  வரலாற்றின் மிகப் பெரிய துயரமும் கசப்பும்.

ஈழத் தமிழினத்தை அழிக்க ஒடுக்க அவர்களின் தாயகப் பரப்பை அபகரிக்கவும் அவர்களின் வரலாறு பூர்வீகம் அடையளாங்கள் என்பவற்றை அழித்து முழுமையான ஒரு இன அழப்பை மேற்கொள்ளளவே சுதந்திர ஸ்ரீல்காவின் பின்னரான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன. நில அபகரிப்பின் ச்சம்தான் முள்ளிவாய்க்கால் வரையான நில அபகரிப்பு யுத்தம். இன அழிப்பின் உச்சம்தான் முள்ளிhய்க்கால் வரையான படுகொலை. தமிழ் மக்களின் தலைமைத்துவ அழிப்புத்தான் உலகத்துடன் இணைந்து புலிகளை முள்ளிவாய்க்காலில் அழித்த நடவடிக்கை.
அபிவிருத்தியால் படுகொலைய மறைக்க முடியுமா?

எனவே முள்ளிவாய்க்காலுக்கான விதை என்பது இப்படித்தான் உருவாகியுள்ளது. முள்ளிவாய்கால் இனப்படுகொலை இன்று உலக அரங்கில் நியாயத்தை கோரிக் கொண்டிருக்கிறது. மூடி மறைக்க முடியாத பெரும் குற்றமாக நிலைத்துவிட்டது. இத்தகைய போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையை மறைக்க இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கு கிழக்கில் சில அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். எனவே ஈழ மண்ணில் ராஜபக்ச செயயும் அபிவிருத்தி என்பதே மனிதப் படுகொலையை சீமெந்தால் மூடி மறைத்து கல்லறை கட்டும் அபிவிருத்திதான். அந்தக் கல்லறையில் ஈழம் என்ற தேசத்தையும் தமிழ் இனத்தையும் அந்த இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்களையும் அந்த இனத்தின் போராட்டத்தையும் அடக்கம் செய்வதே ராஜபக்சவின் அபிவிருத்தி.

ஸ்ரீலங்காத் தலைநகர் கொழும்பில் உள்ள பிரதான புகையிரத நிலையம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. ஆனால் வடக்கின் ரயில் நிலையங்கள் மிகவும் தரமாக புனரமைக்கப்படுகிறது. தெற்கில் உள்ள ரயில் நிலையங்கள் என்ன நிறத்தில் உள்ளன என்று தெரியாத மகிந்த ராஜபக்ச கிளிநொச்சிக்கு முதல் ரயில் டிக்கட் எடுத்து பிரயாணம் செய்து ரயில் நிலையத்தை திறக்கிறார். தான் இழைத்த இனப்படுகொலையை மறைக்க மகிந்த ராஜபக்ச இதையெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் அவர் கிளிநொச்சி சந்தையை திறக்கவும் கிளிநொச்சி வீதியை திறக்கவும் வர வேண்டியிருக்கிறது.

ரயில் பாதைகளையும் ஏ-9 வீதியையும் உங்களுக்கு தந்தேன் என்று பெருமையாக ராஜபக்ச குறிப்பிடுகிறார். சுதந்திரம் பெற்ற ஸ்ரீலங்காவில் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து உரிமையை கோட்டு ஈழத்தமிழனம் போராடத் தொடங்கியபோதும் பாதைகளும் ரயில் நிலையங்களும் இருந்தன.

ஈழ மக்கள் இன ஒடுக்குமுறைக்கு எதிராக விடுதலையை கோரிப் போராடினார்களே தவிர ஏ-9 பாதையையும் ரயிலையும் கேட்டுப் போராடவில்லை. ஆனால் இலங்கையை ஆண்ட அரசுககள்தான் உரிமையும் விடுதலையும் கேட்டால் வீதியை மூடுவோம், உணவையும் மருந்தையும் பறிப்போம் என்றன. ராஜபக்சவே உரிமை இல்லை என்று வெளிநாடுகளின் நிதியில் புனரமைக்கப்பட்ட வீதியையையும் ரயிலையும் தந்து இனப்படுகொலையை மறைக்கிறார்.

வடக்கு மாகாண சபையும் முள்ளிவாய்க்காலும்

வடக்கு மாகாண சபையைகூட தமிழர்களுக்கு விட்டுக் கொடுக்க மனமில்லாதவர்தான் மகிந்த ராஜபக்ச. அதனால்தான் போர் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த பின்னர் தேர்தல் வைத்தார். வடக்கு மாகாண சபை எந்த அதிகாரமும் அற்ற கட்டிடம். அங்கு ஈழத் தமழிர்களின் பிரச்சினையை பேசவும தீர்க்கவும் ஸ்ரீலங்கா சட்டத்தால் தடைவிதிக்கப்பட்ட இடம். அந்தக் கதிரைகளையும் அபகரிக்காமல் அதில் எம்மவர்கள் உட்கார்ந்திருக்கிறார்களே தவிர அதில் வேறு எதுவும் இல்லை.

முள்ளிவாய்க்கால் இனப்படுகெலையை மறைக்க வடக்கு மாகாண சபையை ராஜபக்ச பயன்படுத்த நினைத்தார். வடக்கில் சந்தைகளையும் ரயில் நிலையத்தையும் வீதியையும் திறந்து வைத்தன் மூலம் தமிழ் மக்களின் மனங்களில் இடம்பிடித்து வடக்கு மாகாண சபையில் வென்று தமிழ் மக்களை நான் இனப்படுகொலை செய்யவில்லை என்பதை உலகத்திற்கு காட்ட முயன்றார் ராஜபக்ச. ஆனால் ஈழ மக்களோ எங்களை படுகொலை செய்த இனப்படுகொலையாளி போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச என்று தீர்ப்பளித்து மகிந்தவுக்கு படுதோல்வியை கொடுத்து உலகத்திற்கு இந்த செய்தியை சொன்னார்கள்.

இனப்படுகொலையாளி என மக்கள் தீரப்பளித்த மகிந்த ராஜபக்சவின் முன்னால் நல்லிணக்க வெளிப்பாடுடன் பதவிப் பிரமாணம் செய்து தமிழ் மக்களை பெரும் காயப்படுத்தினார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். அவர் ஈழப் பிரச்சினையை அறியாதவராகவும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூர முகத்தை புரியாதவராகவும் இருந்ததுடன் இராணுவம் ஆட்சி புரியும் வடக்கில் தான் ஒரு அரசியல் பொம்மை என்பதை உணர்ந்து உடைந்த கதிரையில் இருக்கிறேன் என்றார்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட இனப்படுகொலைப் போரில் அநியாயமாகக் கொல்லப்பட்ட மக்களுக்கு ஒரு அஞ்சலியை ஏற்ற முடியாத அதிகாரத்தையும் ஆட்சியையும் கொண்டதே வடக்கு மாகாண சபை. இறந்துபோனவர்களுக்காக ஒரு தீபத்தை ஏற்றக்கூட தமிழீழம்தான் வேண்டும் என்பதையே சிங்கள அரசு எங்களுக்கு உணர்த்துகிறது.

காணாமல் போனவர்களுக்கு மரணப்பத்திரம்

இந்தநாட்களில் காணாமல் போன எனது நண்பன் ஒருவனின் வீட்டுக்குச் சென்றேன். சில நாட்களின் முன்பு அவனது வீட்டுக்குச் சென்ற கொழும்பில் இருந்து வந்த சில அரச அதிகாரிகள் ஒரு விண்ணப்படிவத்தில் கையெழுத்திடுமாறு கேட்டிருக்கிறார்கள். அது மரண அத்தாட்சிப் பத்திரத்திற்கான விண்ணப்பம். இதற்காக ஒரு லட்சம் இழப்பீடு தருவாதாகவும் அவர்கள் என் நண்பனின் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அந்ததாய் துடித்துப் போய்விட்டார்.

உங்கள் பிள்ளை இனியும் திரும்பமாட்டார். அவர் உயிரோடு இல்லாமல் இருக்கலாம். நீங்கள் அவரை நினைத்துக் கொண்டிருப்பதும் அவருக்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதும் இனக்குரோத்த்தை வளர்க்கும். உங்கள் கவலைக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் எனவே கையெழுத்திடுங்கள் என்றார்களாம் அந்த அதிகாரிகள். காணாமல் போனவர்களுக்கு மரணப் பத்திரம் கொடுக்கிறார்கள்.

இறந்தவர்களின் தடயங்களை அழிக்கிறார்கள். எந்த நிலையிலும் தமிழர்களை இல்லாமல் செய்வதே இலங்கை அரசின் நோக்கம். காணாமல் போன ஒருவனின் கதையை ஒரு லட்சத்துடன் முடிக்க நினைக்கிறது மகிந்த அரசு. அவனுக்கான போராட்டத்தை அவன் பற்றிய கண்ணீர்கதையை காத்திருத்தலை ஒலு லட்சத்தால் முடிவுக்கு கொண்டு வரலாம் என்று இவர்கள் வடக்கு கிழக்கை நோக்கி வருகிறார்கள்.

எங்கள் பிள்ளை உயிரோடு வருவான் அவனுக்கு நீதி வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இன்னமும் உயர் வாழ்கிறோம் என்று சொல்லி அவர்களை கடுமையாக ஏசி களைத்துவிட்டதாக சொல்லி அழுதுகொண்டிருந்தார். முள்ளிவாய்க்கால் யுத்த நாட்களில் யுத்த களங்களில் இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்டவர்களும் இலங்கை அரச படைகளிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும் மரண அத்தாட்சிப் பத்திரத்தை வழக்கிக் கொண்டு காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டத்தை ஒடுக்கி அவர்களை சிறையில் அடைக்கிறது சிங்கள அரசு.
தமிழர் தாயகம் அகபரிப்பு

தமிழர்களின் தாயகத்தை அபகரிக்கும் நடவடிக்கைகள் சுகந்திர ஸ்ரீலங்காவுக்கு முன்னராகவே ஆரம்பித்துவிட்டது. ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் அறுபது வீதமான பகுதிகள தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தமையினால் அந்தப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் தடுக்கப்பட்டன. தமிழர் தாயகத்தின் ஏனைய 40வீதமான நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்கள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன. தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்கவும் தமிழ் இனத்தை அழிக்கவுமே அவர்களின் தாயகப் பரப்பை அபகரிக்கும் நோக்கில் பலவந்த சிங்களக் குடியேற்றங்களை சிங்கள அரசுகள் ஊக்குவித்தன.

விடுதலைப் புலிகளிடமிருந்து வடக்கு கிழக்கை கைப்பற்றிய இந்த அய்ந்து வருட காலப்பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நாவற்குழியில் சிங்களக் குடியேற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு கிழக்கின் எல்லைக் கிராமங்களிலும் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை என தமிழர் தாயகம் முழுவதும் சிங்களக் குடியேற்றத்தால் சுற்றிவளைக்கப்படுகிறது.
போரில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கான நிதி உதவிகளையும் சிங்களக் குடியேற்றத்திற்கு இலங்கை அரசு செலவிடுகிறது.

போரால் பாதிக்கப்;பட்ட மக்கள் என்ற பெயரில் வீடுகள், பண உதவிகள் வழங்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றத்திற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். தமிழர்களின் குடிப்பரம்பலை வீழச்சிக்கு உள்ளாக்கி இலங்கை அரசியலில் தமிழ் மக்களின்  இடத்தை இல்லதொழிப்பதுடன் தமிழ் மக்களை அவர்களின் தாயகத்தில் இருந்து நில ரீதியாக ஒடுக்குவதே இந்த நடவடிக்கையின் திட்டம்.

இராணுவமும் நல்லிணக்கமும்

விடுதலைப் புலிகளுடனான போருக்குப் பின்னர் வடக்கு கிழக்கில் இன நல்லிணக்கம் திரும்பிவிட்டது என்று ராஜபக்ச மேடைகள் தோறும் நாடுகள் தோறும் முழங்கிக் கொண்டிருக்கிறார். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் காலம் காலமாக இருக்கும் முரண்பாட்டு உணர்வை மேலும் தீவிரமாக்கி தனது அரசியல் நடவடிக்கைளை செய்கிறார் மகிந்த ராஜபக்ச. அதனால் சிங்கள மக்களிடத்தில் தமிழ் மக்கள் குறித்து எந்த இணக்கமும் ஏற்படவில்லை.

ஈழ – இலங்கைப் பிரச்சினைக்கு சிங்கள – தமிழ் மக்கள் முரண்பாடுதான் பிரதானமானது. தமிழ் மக்களுக்காக எந்தவிதமான அதிகாரங்களையும் விட்டுக் கொடுக்காமல் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யவே சிங்கள கடும்போக்குவாதிகளும் சிங்கள ஆட்சியாளர்களும்; நினைத்தனர். இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் அழித்து ஒடுக்கப்படுவதுதான் நல்லிணக்கம். அதற்கு ஒத்துழைப்பவர்கள் நல்லிணக்க முயற்சியாளர்கள்.

தற்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை அரசின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பேசுவர்களைக்கூட சிங்களப் பேரினவாதிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். தமிழ் மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை இருக்கிறது என்று சொல்லுபவரைக்கூட பயங்கரவாதி என்றே இனவாதிகள் சொல்கின்றனர். இந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் நடந்த போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை குறித்து தமிழ்  மக்கள் பேச முடியாத சூழலை ஏற்படுத்துவதுதான் இனவாதிகளின் நோக்கம்.

இவை எல்லாவற்றுக்காகவும் ஈழ மண்ணில் தொடர்ந்தும் சிங்கள இராணுவத்தை நிலைநிறுத்தி வைத்திருக்க சிங்கள அரசு விரும்புகிறது. தமிழ் மக்கள் இயல்பு வாழ்வுக்கு செல்லக்கூடாது என்றும் அதற்காக இராணுவத்தை நிறுத்த அண்மையில் மீண்டும் புலி என்ற நாடகத்தையும் நடத்தியிருந்தது. இதுவே கடந்த அய்ந்து ஆண்டுகளாக தொடரும் ராஜபக்சவின் நல்லிணக்கம்.

படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அநீதி

முள்ளிவாய்க்கால் படுகொலையில் மாத்திரம் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வீடுகள் தோறும் மரணம். கிராமங்களிலும் நகரங்களிலும் பலர் இல்லை. பல இடங்களில் வீடும் இல்லை அங்கு வாழ்ந்த மக்களும் இல்லை. குடும்பத்துடன் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஈவ இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட ஈழ மக்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூட இடமளிக்காத சிங்கள அரசு எப்படி நீதியை வழங்கப் போகிறது?

இலங்கை அரச படைகள் ஈழப் போரின் இறுதிநாட்களில் தமிழ் மக்களை எவ்வளவு கொடூரமாக படுகொலை செய்தன என்பதை இந்த உலகம் அறியும். அவ்வாறான கொடூரமான இனப்படுகொலைக்கும் போர்க்குற்றத்திற்கும் இதுவரையில் நீதி எட்டப்படவில்லை.

சர்வதேச அளவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவும் சரவதே நலனை முன்னிறுத்தியதாக இருக்கிறதே தவிர ஒரு இனம்மீது மேற்கொள்ளப்பட்ட மாபnரும் இனப்படுகொலை குறித்து உலக சமூகத்திடம் எந்த விதமான குற்ற உணர்வும் இல்லை.

இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்கால் தடயங்களை அழிப்பதைப்போல முள்ளி வாய்க்காலில் கொல்லப் பட்டவர்கள் பற்றிய கதைகளும் அழிக்கவே முயல்கிறது. அதனாலேயே  அந்த மக்களை நினைவுகூற அனுமதி அளிக்கபடவில்லை. மறாகாக மக்கள் கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள். இந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி இது. எத்தகைய மாபெரும் அநீதியாக இனப்படுகொலை நடந்ததே அதைப்Nhhலவே அந்த இனப்படுகொலையின் பின்னரான மாபெரும் அநீதிகளும் அமைந்துள்ளன.

இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழ மக்களுக்கான அஞ்சலி என்பது இந்த விடயம் தொடர்பில் குறித்த இனப்படுகொலை போர்க்குற்ற விசாரணை நடத்துவதே ஆகும். இதற்கு நேர்மையான சர்வதேச விசாரணை ஒன்றே சரியான வழி. அத்துடன் நடந்த – நடந்துகொண்டிருக்கம் இனப்படுகொலையை மற்றும் போர்க்குற்றத்திற்கு நீதியாகவும் தொடரும் அதை தொடர்hமல் செய்த தனி ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்துவதே தீர்வாக அமையும்.

தமிழ்மிதவாத அரசியலும் முள்ளிவாய்க்காலும்

ஸ்ரீலங்காவின் அரசியலில் தமிழ் மிதவாத அரசியால் எதையும் செய்ய முடியாது என்பது ஈழப் பிரச்சினைக்கான காரணம். தமிழ் மிதவாத  அரசியற் தலைவர்கள் அன்று அதனைத் தட்டிக் கேட்டபோது ஆரம்பிக்கப்பட்ட இனக் கலவரப் படுகொலைகள் முள்ளிவாய்க்கால் என்ற மிகப் பெரும் இனப்படுகொலையை சந்திக்க நேரிட்டது. தமிழ் மிதவாத அரசியல் முள்ளிவாய்க்கால் படுகொலை காலத்திலும் எதையும் செய்ய முடியாமல் இருந்தது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான இந்த அய்ந்து ஆண்டுகளிலும் அவ்வாறே இருக்கிறது.

ஸ்ரீலங்காப் பாராளுமன்றத்தில் சிங்களப் பெரும்பான்மையைமீறி எதையும் செய்துவிட இயலாது. அந்தப் பாராளுமன்றத்திற்கு செல்வதற்கே இன ஒடுக்குமுறை சட்டத்தின் கீழ் கையொப்பம் இட்ட செல்ல வேண்டும். சிங்களப் பேரினவாத ஆதிக்கத்தால் எதையும் செய்ய முடியாதபடி தெரிவுக்குழுவுக்கு வாருங்கள் என்று பொறிக்குள் அழைக்கிறார் ராஜபக்ச.

தமிழ் தலைவர்களுக்கும் அரசுக்கும் நடந்த பேச்சுவார்த்தைகளை ராஜபக்ச நிறுத்திவிட்டார். ஆக தமிழ் மிதவாத அரசியல் தலைவர்கள் ஒரு செய்தியாளர்களாகவே உள்ளனர். அவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அங்கு தெரிவிக்க்கூடும். அதைக் கடந்து அவர்கள் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய இயலாதவர்களாகவே உ;ளளனர்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கும் போர்க்குற்றத்திற்கும் எதிராக ஒரு வலுவான தீர்மானத்தை கொண்டுவர தமிழ் மிதவாத தலைமைகள் முயற்சி செய்யவில்லை. தேர்தல் காலத்தில் இனப்படுகொலை, போர்க்குற்றம், தமிழர் தாயகம், சுயாட்சி, தமிழ் தேசியம் பேசும் தமிழ் மிதவாத தலமைகள் ஜெனீவாவில் அமெரிக்கா எப்படியான தீர்மானத்தை கொண்டுவந்தாலும் போதும் என்றே கருதின.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கொடூரத்தை எந்த விதத்திலும் அறியாத அதற்கு தொடர்பற்ற தமிழ் மிதவாதத் தலமைகள் தொடர்ந்தும் அநதப் படுகொலை குறித்து அதற்கான நீதி குறித்த பிரக்ஞையின்றி உள்ளனர்.  பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் முள்ளிவாய்க்காலை புரிந்து கொள்ளவில்லை. இதுவே முள்ளிவாய்க்கால் படுகொலைக் குற்றத்திலிருந்து ராஜபக்ச தப்பிச் செல்லவும் இலங்கைக்கு எதிரான வலுவான நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருக்கவும் காரணம்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து அய்ந்து ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எதையும் நிறுத்தாமல் இன்னமும் தீவிரப்படுத்தி உள்ளார் மகிந்த ரஜபக்ச. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளி என்ற பெரும் கறைபடிந்த முகத்துடன் வரலாற்றுடன் உலக அரங்கில் இருக்கும் மகிந்த ராஜபக்ச அந்த இனப்படுகொலையை இன ஒடுக்குமுறையை இன்னமும் நிறுத்தாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்.

அய்ந்து வருடங்கள் என்ன அய்யாயிரம் வருடங்கள் ஆனாலும் முள்ளிவாய்க்காலுக்கு நீதி கிடைக்கும்போது தமிழர் தேசம் இயல்பும் அமைதியும் கொண்டதொரு வாழ்க்கைக்கு திரும்பும் என்பதையே இவைகள் எடுத்துரைக்கின்றன.

-பார்தீபன்

TAGS: