யாழ்ப்பாணம் தொடர்ந்தும் இருண்ட குடா நாடாகவே காணப்படுகின்றது என பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றியத்தின் தலைவர் சந்திரகுப்த தெனுவர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றியம் வெறுமனே சம்பள உயர்விற்காக மட்டும் போராடி வரும் அமைப்பு கிடையாது.
ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றோம்.
யாழ்ப்பாணம் இருண்ட குடா நாடாக மாற்றமடைந்துள்ளது. அங்கிருந்து தெற்கிற்கு தகவல்கள் கூட அதிகமாக வருவதில்லை.
யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்நோக்கி வரும் அழுத்தங்கள், அடக்குமுறைகள் பற்றி அடிக்கடி கேட்கக் கிடைக்கின்றது.
போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.