பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அமைச்சரவை திருத்தி அமைக்கப்படும் என்று கூறும் செய்தியை மறுத்தார்.
வெள்ளிக்கிழமை அமைச்சரவை திருத்தி அமைக்கப்படும் என்று நாளேடு ஒன்றில் வெளிவந்த தகவல் பற்றி நஜிப்பிடம் வினவப்பட்டதற்கு, “யான் அறியேன்” என்று சுருக்கமாக மறுமொழி கூறினார்.
துர்க்மினிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு கோலாலும்பூருக்குத் திரும்புமுன்னர் அஷ்கபாத் அனைத்துலக விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் நஜிப் இவ்வாறு கூறினார்.
நஜிப், மசீச தலைவர் லியோ தியோங் லாயையும் கெராக்கான் தலைவர் மா சியு கியோங்கையும் அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளுமுன்னர் மொத்த அமைச்சரவையையும் திருத்தி அமைப்பது பற்றி ஆலோசிப்பதாக மலாய் மெயில் செய்தி வெளியிட்டிருந்தது.
-பெர்னாமா
நல்ல தமாஷ்! வடிவேலு தோத்துப்போயிடுவாறு. இன்னும் சில தினங்களில் அமைச்சரவை மாற்றம் பெறப்போவது உறுதி. குறித்துக் கொள்ளுங்கள்.
நாட்டில் என்ன நடக்கிறதென்பது நஜிப்பிற்கு தெரியாது. தூங்கிக்கொண்டிருக்கும் நஜிப்பை ரோசம்மா எழுப்பினார். “சீக்கிரம் எழுந்திரிங்க. துர்கிச்டானில் [Turkestan] இருந்து செய்தி வந்துள்ளது. நம் பிள்ளைக்கு தலை வலியாம். வாங்க போகலாம். பகல் [flight ] பிளைட்டிலேயே போயிடலாம். ராத்திரி ஏறுற கப்பலெல்லாம் காணாம போயிடுது. மேலும் இராத்திர நேரத்துல அல்தாந்துயா ஆவி வேற சுத்திக்கிட்டிருக்காம். ஐயோ! பேப்பர்ல செய்தி வந்திருக்கு பாருங்க. மந்திரி சபையை மாத்தப் போரிங்கலாமே?”. படுக்கையை விட்டு துள்ளி எழுந்த நஜிப்.”எவன் சொன்னான்.? ……….அட, ஆமா….. சும்மா விட மாட்டேன். மலேசிய கினியை sue பண்ண மாதிரி இந்த பத்திரிகை காரங்களையும் [sue ] பண்ணப் போறேன்.”
நஜிப் நம்நாட்டு பிரதமரா ????? இல்லை நாமம் போடும் பிரதமரா!!!!!!!!!
நல்லா ஆடுறாரு பிற …டமார் !!!!!
ரோச்மாஹ் எப்படி இருக்கும் என்பது மதும்தன் இவனுக்கு தெரியும்