குழந்தைப் பராமரிப்பு விவகாரத்தில் ஷியாரியா, சிவில் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் முரண்படுவதால் தாம் “நடுவுப் பாதை”யில் செல்லபோவதாக அறிவித்துள்ள போலீஸ் தலைவர் காலிட் அபு பக்காருக்கு சட்டத்தை நிலைநாட்டுவதுதான் போலீசின் கடமை என்பதை கைரி ஜமாலுடின் நினைவுபடுத்தியுள்ளார்.
காலிட்டின் அறிக்கை பற்றிக் கருத்துரைக்குமாறு இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரியிடம் செய்தியாளர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
“என்னைப் பொருத்தவரை பிஎன் இளைஞர் தலைவன் என்ற முறையில் அமலாக்க பிரிவினர் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என்றுதான் சொல்வேன்” என கைரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அடிச்சான் மச்சான் பல்டி
இதை உள் துறை அமைச்சர் சொல்ல வேண்டியவை,விளையாட்டு
அமைச்சர் சொல்கிறார்.
இந்த அமைச்சருக்கு உள்ள புத்தி உல் துறை அமைச்சருக்கு வராத .
உள்துறை அமைச்சருக்கு ,கைரியை போல நன்கு சிந்தித்து பதில் சொல்ல நேரம் இல்லை போலும் ,என்ன செய்வது !!
கைரி அவர்கள் திறமையாய் பதில் கூரி உள்ளார்.தெரிமா காசெஹ்
அவரவர் சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டு பேட்டி கொடுப்பது போதும் மிஸ்டர் கைரி, 100000 பேர் கருதுகூரிவிட்டார்கள் , ஒரு நீதிபதியில் கட்டளையை நிறைவேற்றாமல் , நீதித்துறைக்கே ஆலோசனை சொல்லும் புத்திசாலி IGP யை பற்றி அரசாங்கம் என்ன செய்வதாக உத்தேசம் ?, அதை சொல்லுப்பா ….!
என்னடா பொல்லாத சட்டம்?
இஞ்சே கைரி உனக்கு தெரிவது காளிட்டுக்கு தெரியவில்லையே !