சர்வதேச விசாரணைக்கு இடமளித்தால் மட்டுமே தப்பமுடியும்!- ஐ.தே.க எச்சரிக்கை

mahinda_sad_mangalaசர்வதேசத்தை ஏமாற்றிய காலம் கடந்துவிட்டது. சர்வதேச விசாரணைக்கு இடமளித்து ஒத்துழைப்பினை வழங்குவதே ஒரே வழியாகும். அதனைத் தடுத்தால் அத்துமீறிய சர்வதேச விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இதன் விளைவுகள் மிக மோசமாக அமையுமெனவும் எச்சரித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 26ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் இடம்பெற்ற போது இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான விசாரணைகுழு நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்ந்தும் அரசாங்கம் இவ்விசாரணைக்கு மறுப்புத் தெரிவிக்கின்றமை குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் வினவிய போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச விசாரணையொன்று இடம்பெறுவதை தடுத்திருக்க முடியும் என்னும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அச்சந்தர்ப்பத்தினை தவறவிட்டார்.

ஆரம்பத்தில் இருந்தே இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் இருக்கும் போது அரசாங்கம் சுயாதீன உள்நாட்டு விசாரணையொன்றை மேற்கொண்டு பிரச்சினைகளுக்கான தீர்வினைக் கண்டிருக்குமாயின் இன்று சர்வதேச அரங்கில் தலைகுனிய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

யுத்தம் முடிவடைந்து மிக நீண்ட கால அவகாசம் அரசாங்கத்திற்கு வழங்கப்படும். அவை தொடர்பில் எவரும் கவனத்திற்கொள்ளவில்லை. இப்போது காலம் கடந்த பின்னர் உள்நாட்டு சுயாதீன விசாரணனைகளை செய்வது, சர்வதேச விசாரணையினை எதிர்த்து போராடுவது என்பதற்கெல்லாம் வெறுமனே மக்களை ஏமாற்றும் வேலையாகும்.

TAGS: