இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கோரப்பட்ட முன்மொழிவுகளிற்கு பல தரப்புக்களிடமிருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை 150 இற்கும் அதிகமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூடிய அளவில் புலம்பெயர் தேசங்களினிலிருந்து ஆரோக்கியமான முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அத்தரப்புக்கள் இந்தியாவிலிருந்து கூட முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தன.
அதிலும் கூடிய அளவில் புலம்பெயர் தேசங்களில் கிடைக்கப்பெற்ற முன்மொழிவுகளில் தமிழீழம் என்பதே முடிந்த முடிவென பெருமளவிலான முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்த தரப்புக்கள் கிடைக்கப்பெறும் முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டு அனைத்து தமிழ் அரசியல் தரப்புக்களையும் இணைந்து பொதுவான தீர்வு திட்டமிட்டம் வகுக்கப்படவுள்ளமாகவும் அதையே தமிழ் தரப்புக்கள் சர்வதேசத்திடம் முன்வைக்குமெனவும் தெரிவித்தன.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் படி அனைத்து தரப்புக்களிடமும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன் பகிரங்க கோரிக்கையினை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.