தொடர் அழுத்தங்கள் மூலம் இனப் பிரச்சினைக்கான மாற்றத்தினை எதிர்பார்க்கலாம்: திருநாவுக்கரசு

tnaமக்களை ஒன்று திரட்டி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கலாம் என நவசமாஜக் கட்சியின் உப செயலாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுவது போல் பௌத்த போதகங்களை பின்பற்றுவதன் மூலம் எமது மக்களையும் நாட்டையும் கட்டியெழுப்ப முடியும் என்ற கருத்து வேடிக்கையானது என்று குறிப்பிட்டார்.

கொழும்பு, கொம்பனித் தெருவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றுக்கு ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரும் இந்திய அரசின் முக்கிய அமைச்சருமான சுப்பிரமணிய சுவாமிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது இனப் பிரச்சினை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இந் நாட்டில் சிறுபான்மையின மக்கள் எவ்வித உரிமைகளும் இன்றி ஒடுக்கப்பட்ட மக்களாகவே வாழ்கின்றார்கள்.

ஆட்சியாளர்கள் எல்லா உரிமைகளையும் அனைத்து மக்களிடத்திலும் சமமாக பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறு சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக பல்வேறு தேச தலைவர்களும் சர்வதேசங்களும் எவ்வளவு வலியுறுத்திய போதிலும்  அரசு அவற்றை பொருட்படுத்தாமல் தமது சுயநலம் கருதியே செயற்படுகின்றது என தெரிவித்தார்.

TAGS: