நில அபகரிப்பும் இராணுவ அச்சுறுத்தலும்: சிறிலங்காவினை அம்பலப்படுத்திய ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி!

geneva-meeting-02தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசினது நில அபகரிப்பு மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களை ஐ.நா சிறப்பு பிரதிநிதியின் அறிக்கை மனித உரிமைச்சபையில் அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு டிசெம்பரில் 2-6 இலங்கைத் தீவுக்கு ( யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு – கிளிநொச்சி)  பயணம் செய்திருந்த ஐ.நாவின் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான சிறப்பு பிரதிநிதி சலோகா பியானி அவர்களது பயண ஆய்வறிக்கையிலேயே இவ்விவகாரம் அம்பலமாகியுள்ளது.

29 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையினை மனித உரிமைசபைக்கு சமர்ப்பித்த ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி, இன்றைய (12-062014) அமர்வில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் சுதந்திரமாக தங்களது சொந்த இடங்களுக்கு திரும்ப வேண்டியதன் அவசியம் குறித்தும், பெண்கள் எதிர்கொள்கின்ற பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்துரைத்தார்.

போர்ச்சூழல் காரணமாக தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ள மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் மற்றும் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தினால சொல்லப்பட்ட மக்களின் நிலைமைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் சிறிலங்காவின் உயர்மட்டத்தில் சொல்லப்படுகின்ற புள்ளிவிபரங்களுக்கும் அதிகாரிகள் மட்டத்தில் சொல்லப்படுகின்ற புள்ளிவிபரங்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் குறித்தும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்கள்

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத நிலைமைக்கு சிறிலங்கா படையினரது நில அபகரிப்பே பிரதான பிரதான காரணியாக அமைகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் இராணுவ பிரசன்னம் காரணமாக இந்த மக்கள் தங்களது நிலைப்பாட்டினை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத சூழல் நிலவுகின்றது.

மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் தங்களை தமது சொந்தக் காணிகளில் குடியேற்றவில்லை எனச் சொல்கின்றனர். அவ்வாறு மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கான புறச்சூழல் ஏற்படுத்தப்படவில்லை.

நில அபகரிப்பு :

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் நிலங்கள் இராணுவ தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகள் உள்வாங்கப்படுகின்றன. உயர்பாதூப்பு வலயங்களாக பொதுமக்களின் காணிகள் உள்ளன.

நீதிமன்றத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்ட பொதுமக்களின் காணி விவகாரம் இராணுவத்தின் மறைமுக தலையீடு காரணமாக நிலுவையில் உள்ளது.

பொதுமக்களின் காணிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு புனித இடங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றது.

இராணுவ பிரசன்னம்

இராணுவத்தினர் பயிர்ச்செய்கை, காய்கறி வியாபாரத்திலும், மீன்பிடியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தினரது தலையீடுகள் நிறைந்து காணப்படுகின்றது.

யாழ்குடாவில் அண்ணளவாக 32 பிரதான இராணுவ முகாம்கள் காணப்படுகின்றது.

தேர்தல் இடம்பெற்று வட மாகாணத்தில் தமிழ் தேசியக் கட்சியின் வெற்றிக்கு பிற்பாடு இராணுவத்தின் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகின்றது.

பெண்கள் நிலை

சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதவர்களில் பெண்களும் சிறுவர்களும் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆண்துணையற்ற பெண்கள் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். இவைகள் பெரும்பாலும் இராணுவத்தினராலேயே இடம்பெறுகின்றது.

இராணுவத்தினர் தங்களது தேவைகளுக்காக பெண்களை வற்புறுத்தி விபச்சார நிலைக்கு தள்ளியுள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களது மனித உரிமைகளை மையமாக கொண்ட பிரதிநிதி சலோகா பியானி அவர்களது அறிக்கையில், தனது கள ஆய்வுக்கமைய 14 பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

TAGS: