2009-க்குப் பிறகு வடக்கு மாகாணத்தில் சிங்களவர் குடியேற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டு விடுவார்கள் என்பதே கசப்பான உண்மை.
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் சஞ்சிகையில் கழுகார் பதில்கள் பத்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கேள்வி – தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் பொலிஸ் அதிகாரத்தைத் கொடுக்க மறுக்கும் இலங்கை அரசின் நிலைப்பாடு எதை உணர்த்துகிறது?
பதில் – மகிந்த ராஜபக்ச இன்னும் திருந்தவில்லை, திருந்த மாட்டார் என்பதையே இது உணர்த்துகிறது.
ஜெயவர்த்தனா உண்மையான பௌத்தராக இருந்திருப்பாரேயானால் நாங்கள் ஆயுதம் தூக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சொன்னார்.
ராஜபக்ச, பௌத்தத்தின் மீது இம்மி அளவு நம்பிக்கையும் இல்லாதவர் என்பதன் அடையாளம் இது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில்’ என்று நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள்.
2009-க்குப் பிறகு வடக்கு மாகாணத்தில் சிங்களவர் குடியேற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டு விடுவார்கள் என்பதே கசப்பான உண்மை.
இவ்வாறு உள்ளது.