இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையாளர்கள் ஜூலையில் ஒன்று கூடுகின்றனர்

rupert colville_001போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீதான விசாரணைகள் இந்த மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் மனித உரிமைகள் காப்பு விடயம் தொடர்பில் அடுத்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அறிக்கையை முன்வைக்கும் நோக்கிலேயே மனித உரிமைகள் பேரவை செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் ரூபர்ட் கொல்விலி இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகள் முதலில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

பின்னர் பாதுகாப்பு சபை உட்பட்ட உயர் சபைகளுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான விசாரணைகள் ஜூன் நடுப் பகுதியில் ஆரம்பித்து 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் முடிவடையும்.

இந்தநிலையில் விசாரணையாளர்கள் அனைவரும் எதிர்வரும் ஜூலையில் ஜெனீவாவில் ஒன்று.கூடவுள்ளதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பரில் இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் வாய்மூல அறிக்கை ஒன்றை எதிர்வரும் செப்டம்பரில் சபையில் சமர்ப்பிப்பார் என்றும் ரூபர்ட் கொல்விலி தெரிவித்துள்ளார்.

TAGS: