இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதற்கு ஒத்துழைக்காமல், சூடான் நிலைமையே இலங்கையிலும் ஏற்பட அரசாங்கம் வழியேற்படுத்தியுள்ளதாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் அறிவித்தார்.
இது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ளது. வாக்கெடுப்பும் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், அரசாங்கம் உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்துவதாக சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத படியாலேயே, இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
‘உள்நாட்டு விசாரணையை நடத்துவதற்கு ஐநா மனித உரிமைகள் பேரவை மூன்றாண்டு காலம் அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் அந்த உள்நாட்டு விசாரணை நடக்கவில்லை. இதில் அடைப்படைத் தவறு இழைத்தது அரசாங்கம் தான்’ என்றார் கிரியெல்ல.
சர்வதேச விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்ற முடிவை ஏற்கனவே எடுத்துள்ள அரசாங்கம், நாடாளுமன்றத்திடம் தீர்மானம் எடுக்கும் உரிமையை கொடுப்பது ‘கேலிக்கூத்து’ என்றும் அவர் தெரிவித்தார்.
‘கடந்த பல ஆண்டுகளில் இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவை பல தீர்மானங்களைக் கொண்டுவந்தது. அந்தக் காலத்தில் நாடாளுமன்றத்திடம் எதுவும் கேட்கப்படவில்லை. அப்போதெல்லாம் நாடாளுமன்றத்துக்கு வெளியில் தான் முடிவுகளை அரசாங்கம் எடுத்திருந்தது’ என்றும் கூறினார் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்.
‘சூடான் சிவில் யுத்தத்தில் விசாரணை நடத்துமாறு ஐநா சூடானிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் சூடான் அதனைச் செய்யவில்லை. அதனால் இந்த இரண்டு இனங்களும் ஒன்றாக வாழமுடியாது என்று ஐநாவில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இறுதியில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி நாட்டைப் பிரித்தார்கள்’ என்றார் லக்ஷ்மன் கிரியெல்ல. -BBC
அதற்கு அவசியம் வந்துவிட்டது.இனி தமிழீழம் தான் தமிழர்களின் லட்சியம்.இல்லையேல் தனி தமிழ் நாடு என்ற நெருப்பு எரியும் நேரம் வந்துவிடும்.
சூடான் நாட்டை போல இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ முடியாததால் இரண்டாக பிரித்தார்கள் அதே கதிதான் இலங்கைக்கும்
வாழ்துக்கள்.
ஆசாமி -சேர்ந்து வாழ முடியும் அங்கு சம நிலை இருந்தால்- ஓர் இனம் மற்ற ஒன்றை அடிமைபடுத்தினால் எப்படி சேந்து வாழ முடியும்?
இங்கு மட்டும் என்ன வாழுதாம்? என் இந்நாட்டில் இப்போது இவ்வளவு இனபிரட்சனைகள்? சுதந்திரம் வாங்கும் பொது மூன்று இனங்களும் அண்ணன் தம்பி ஆனால் இன்று நாம் விட்டு கொடுத்து நம்மை நாமே அடிமைகளாக்கி கொண்டோம்