சிங்கள இனவாத அமைப்பினால் அளுத்கமை உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் நாடுகள் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆறு முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் நேற்று திங்கட்கிழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்- அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் அவசரமாக சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்த முக்கிய சந்திப்பில் ஈரான், கட்டார், ஆப்கானிஸ்தான், குவைத், பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய ஆறு நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், கட்சியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் ஹக்கீம் குறித்த முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்கு அளுத்கம சம்பவம் தொடர்பில் மிகவும் ஆழமாக விளக்கிக் கூறியதுடன் அதன் பின்னணிகள் குறித்தும் அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
பொது பல சேனா என்கின்ற பேரின கடும்போக்கு- தீவிரவாத இயக்கத்தினரின் இந்த திட்டமிட்ட தாக்குதல்களினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உயிர் மற்றும் உடமை இழப்புகள் தொடர்பிலும் தற்போதைய கள நிலைவரம் பற்றியும் இதன்போது அமைச்சர் ஹக்கீம் விளக்கமளித்தார்.
இவற்றை மிகவும் அவதானமாக கேட்டறிந்து கொண்ட தூதுவர்கள் இலங்கை வாழ் முஸ்லிம்களின் இக்கட்டான நிலைமை குறித்து தமது நாடுகள் கவலை கொண்டிருப்பதாகவும் அவர்களின் உயிர், உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிகவும் பொறுப்புணர்வுடன் முயற்சிகளில் ஈடுபட தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டனர்.
குறிப்பாக இப்பிரச்சினைகள் தொடர்பில் தமது நாடுகளின் தலைவர்கள், இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்க உயர் மட்டத்தினருடன் நேரடியாக பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு தாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அமைச்சர் ஹக்கீமிடம் தூதுவர்கள் உறுதியளித்தனர்
அத்துடன் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள முஸ்லிம் நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டிலும் இலங்கை முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து பிரஸ்தாபித்து அதன் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தூதுவர்கள் உறுதியளித்தனர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
இச்சந்திப்பு மிகவும் பயன்மிக்கதாகவும் திருப்திகரமாகவும் அமைந்திருந்தது எனவும் ஜெமீல் குறிப்பிட்டார்.
தமிழர்கள் கொள்ளப்ப்படும்போது பேசமால் இருந்த ஒரு தமிழ் இன துரோகி. இவன் பேசுவது தமிழ் அனால் தன்னை தமிழன் என்று சொல்வதைவிட இஸ்லாமியன் என்று சொல்வதையே பெருமையாக கொள்பவன்.முஸ்லிம் சமுதாயத்தை சிங்களவர்களிடம் அடகு வைததவன்.அனால் இன்று இவனை தமிழனும் சிங்களவனும் நன்கு புரிந்து கொண்டனர்.இவன் தமிழனுக்கு விதைத வினையை இன்று அறுவடை செய்கிறான்.
சிங்கள பௌத்த மதவாதிகளுக்கு தமிழர்களை ஒழித்த பின் இசுலாமியர் மேல் இருந்த வெறுப்புக்கு ஹலால் சான்றழிப்பு உதவிவிட்டது ஆனால் இதற்கு தெரிந்தோ தெரியாமலலோ இசுலாமியர்களே உதவிவிட்டார்களே? முன்பு
தமிழர்கள் காலி. இப்பொது இசுலாமியர்கள். இப்பதான் தமிழர்களின் வலி விளங்கும் தமிழரின் உயிர் உடைமைகள் சேதமாக்கப் படும்போது பார்த்து ரசித்தவர்கள் துணை நின்றவர்கள் சிங்களப் பேரினவாதம் எப்படி என்பதை உணர்க்கிறார்கள் தமிழர்களின் இன அழிப்பை கண்டிக்கதவர்கள் முஸ்லிம்கள் ?
இந்த முஸ்லிம்கள் தமிழர்கள்தான். விதைவிதைத்தவந்தான் அறுக்க வேண்டும்.– ஒரே மொழி பேசியும் ஒற்றுமையுடன் ஒன்றாக இருந்திருக்கவேண்டும்.
முள்ளிவைக்காளில் எம் சொந்தங்கள் கொடூரமாக படுகொளைசெய்ததை காதன்கூடியில் காத்தான்குடி ,ஏறாவூர் ,கொலோம்போ இஸ்லாமிய பகுதிகளில் சிங்களவன் தமிழின அழிப்பு வெற்றியை பாட்டாசு வெடித்து பால்சோறு பரிமாறி கொண்டாடினார்கள் ..
ஐநாவில் படுகொலைக்கு எதிராக தீர்மானத்தில் இலங்கைக்கும் ஆதரவாக இஸ்லாமிய நாடுகளை வேண்டி கொண்டவர்கள் !!
உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி ?
அடாவடி இஸ்லாமிய அமைசர் ரிசாத் பதியுதீன் வன்னி பாரதிபுர தமிழ்மக்களின் காணியை விட்டு உடனடியாக காலிபண்ண சொல்லி தன் அடியாட்கள் ,நான்கு பாகிஸ்தானியர்கள் , இலங்கைராணுவம் சகிதம் மிரட்டி வெளிஎர்ற்ற பார்த்தார்கள் ! அந்த நிலம் பாக்கிஸ்தான் தொழில்சாலை அமைக்க கொடுக்கபட்டுள்ளதாம் .. தமிழர்கள் அகதிமுகாம்களிலிருந்து பலபோடாட்டத்தின் மத்தியில் சொந்த நிலத்தில் குடியேறி வாழ முடியல !! சிங்களவன் மட்டும் தொல்லை கொடுக்கவில்லை ..
சிங்களனின் இனவெறி தாக்குதலில் சிருகுளந்தையும் உயிரிழந்துள்ளது ! எங்கள் தமிழ்பேசும் இஸ்லாமிய சகோதரர்களுக்கான தாக்குதலை கண்டிக்கிறோம் .. சம்பந்தன் அரியேந்திரன் போன்றோரும் கண்டித்துள்ளார்கள் .. தமிழர் பண்பாடும் அதுவே .. ஒருஇனத்தின் துன்பத்தில் நாம் குரல்கொடுக்கவேண்டும் சக மனிதனாக ..