இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணையின் ஆரம்ப அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட உள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நியமித்துள்ள இந்த விசாரணைக் குழுவினர் தமது விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் நடு பகுதியில் ஆரம்பிக்க உள்ளனர்.
பிரித்தானிய பிரஜையான சேன்ட்ரா போய்டாஸ் பிரதான இணைப்பாளராக செயற்படும் இந்த விசாரணைக்குழுவில் 12 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
கம்போடியாவின் கெமரூஜ் அமைப்பின் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்தின் நீதிபதியான நியூசிலாந்தின் கார்ட் ரைட், சட்ட மருத்துவ நிபுணர்கள், சட்ட வல்லுனர்கள், ஆண் மற்றும் பெண் சமூக நிலை தொடர்பான நிபுணர்கள் உட்பட 12 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே இந்த விசாரணைகளை நடத்த வாய்ப்பிருப்பதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.