நாயை ருசிக்கும் உலகின் கொடூர திருவிழா

dog_meat_festival_001சீனாவின் விலங்கு உரிமை ஆர்வலர்களை எதிர்த்து அந்நாட்டில் நாயை கொன்று உண்ணும் மனித தன்மையற்ற திருவிழா நடந்துள்ளது.

சீனாவின் யூலிங் நகரில் நாய்களை கொன்று உண்பதை விலங்கு உரிமை ஆர்வலர்கள் சமீபத்தில் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர்.

மேலும் நாய்களை கொன்று விற்பனை செய்யும் கடைகளின் மீது ஆர்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டது, மக்களை ஆத்திரமடைய செய்துள்ளது.

எனவே விலங்கு உரிமை ஆர்வலர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிகளவில் நாய்கள் கொல்லப்பட்டு வருவதுடன், அதனை ஒரு திருவிழா போல் அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நாய்கள் தெருக்களில் சுற்றுவதால் அபாயகரமான நோய்கள் வரும் என்றும் நாயை தாக்கியுள்ள ரசாயன பொருட்களால் அதை உண்ணும் மக்களின் உடல்நலம் கெடும் எனவும் விலங்கு உரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

எனினும் அதை ஏற்க மறுத்த யூலின் மக்கள், நாய் உண்ணுவது தங்கள் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தரும் என பாரம்பரியமாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.