புதிய சட்டப்படி ‘தலை வெட்டப்படும்’ என்று சொல்வது குற்றமாகும்

billபெர்காசா  தலைவர்  ஒருவர் சிலாங்கூர்  சுல்தானை  அவமதிப்போர்  அல்லது  இஸ்லாத்தை  அவமதிப்போரின்  “தலை  வெட்டப்படும்”  என்று  மருட்டி  இருந்தார். இப்படிச்  சொல்வது  தேச நிந்தனைச்  சட்டத்துக்குப்  பதிலாக   கொண்டுவரப்படவுள்ள  மூன்று  புதிய  சட்டவரைவுகளில்  ஒன்றின்படி  குற்றமாகும்.

அப்படிப்பட்ட  மிரட்டலை  விடுத்த  மனிதர் இன, சமயத்தின்  அடிப்படையில் “இன்னொரு  மனிதருக்குத்  தீங்கு  விளைவிக்கும்  தெளிவான  நோக்கத்தில்தான்” அப்படி  மிரட்டுகிறார்  என்பதால்  அது  குற்றமாகிறது.   தேசிய  ஒற்றுமை ஆலோசனை  மன்றத்தின்  சட்ட  விவகாரக்குழுத்  துணைத்  தலைவரும்  அந்தச்  சட்டவரைவை  உருவாக்கியவர்களில்  ஒருவருமான  லிம்  சீ  வீ  இவ்வாறு    கூறினார்.