பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அமைச்சரவை மாற்றம் பற்றி அறிவிப்பதற்குத்தான் இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துகிறார் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
செய்தியாளர் கூட்டம் பிற்பகல் மணி 12.30க்கு, புத்ரா ஜெயாவில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
திருத்தி அமைக்கப்படும் அமைச்சரவையில் மசீச தலைவர்களும் கெராக்கான் தலைவர் மா சியு கியோங்கும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இன்னொரு வதந்தி முகைதின் யாசின் நஜிப்பின் உறவினரான ஹிஷாமுடின் உசேனுக்கு இடம்விட்டு துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறியது.
அதை சம்பந்தப்பட்ட மூவருமே மறுத்தனர். அது ஓர் “அரசியல் கட்டுக்கதை” என நஜிப் வருணித்தார்.
மொத்த தருத்திரமும் ஒன்னு சேருதே, உருப்படுமா நாடு ???
பெர்காசாகாரன் மிரட்டுகிறான். அவனுக்கும் ஓரிடம் கொடுத்துவிடு…