இலங்கை இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை

aluthgama_tense_001இலங்கை இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என இந்திய ஊடகமான தி ஹிந்து ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர், தெற்கின் சுற்றுலா நகரங்களான பேருளை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் பாரியளவில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் உருவாக்கப்பட்ட பௌத்த மத அமைப்பு ஒன்றே இந்த சம்பவங்களின் பின்னணியில் செயற்பட்டுள்ளது.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத காரணத்தினால் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

1980களில் இடம்பெற்ற ஜே.வி.பி வன்முறைகளை நினைவூட்டும் வகையில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றது.

கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கு எதிராக இதற்கு முன்னரும் இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அமைப்பின் நடவடிக்கைகளை அரசாங்கம் வேறு வார்த்தைகளினால் கண்டிக்கப்பட்டாலும், அந்த அமைப்பின் முக்கிய நிகழ்வுகளில் ஜனாதிபதியும் அவரது பலம்பொருந்திய சகோதரர்களும் பங்கேற்றுள்ளனர்.

நடுநிலையாக சிந்திக்கும் அனைத்து மக்களும் இந்த வன்முறைகளை கண்டிக்கின்றனர்.

ஏற்கனவே தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாத நிலையில் முஸ்லிம் பிரச்சினைகளை தூண்டுவது ஆரோக்கியமானதல்ல.

பிரச்சினைகளை சரியாக புரிந்து கொண்டு அதற்கு தீர்வு வழங்காது அரசாங்கம் கடந்த காலத்திற்கு செல்லவே முயற்சித்து வருவதாக தி ஹிந்து குற்றம் சுமத்தியுள்ளது.

யாரும் உயிர்களுக்கோ சொத்துக்களுக்கோ சேதம் விளைவிக்க முடியாது. அதற்கு அனுமதியில்லை என்பதனை அரசாங்கம் எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் வெளிப்படுத்த வேண்டும்.

அரசாங்கம் வரலாற்றில் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதே இவ்வாறான சம்பவங்களின் மூலம் தெளிவாகின்றது. கௌதம புத்தர் இதனை கற்பித்தார்? என பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

TAGS: