புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் சர்வதேச மாநாடு! ஜூலை 23ல் மொரீசியஸில் ஆரம்பம்!

navin-ramkoolamவெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முதலாவது அனைத்துலக மாநாடு, மொரீசியஸில் ஜூலை 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடைபெறவுள்ளது.  மொரீசியஸ் பிரதமர் நவின் ராம்கூலம் மாநாட்டை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இது குறித்துப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், மொரீசியஸின் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமன் தெரிவிக்கையில்,

சுமார் 60 நாடுகளில் பரந்து விரிந்து வாழும், தமிழர்களைப் பண்பாடு, கலாசாரத்தால் இணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

இதையொட்டி இந்த மாநாடு மொரீசியஸின் மோகா நகரில் மகாத்மா காந்தி கல்வி நிறுவன வளாகத்தில், ஜூலை 23 முதல் 27 வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நவின் ரம்கூலம் ஆரம்பித்து வைக்கிறார்.

3 நாள்களும் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், கருத்தரங்கம் உள்ளிட்டவை நடக்கின்றன. 60 நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் இதற்கு வர விரும்பி பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து மாநாட்டில் பங்கேற்போர் சென்னை சோழிங்க நல்லூரில் செயல்படும் ஆசியவியல் நிறுவன அலுவலகத்திலும் பதிவு செய்யலாம்.

தமிழர்கள் மொழியாலும், பண்பாட்டாலும், கலாசாரத்தாலும் ஒன்றுபட வேண்டுமென்ற நோக்கத்தில், தமிழ்க் கலாசாரப் பாதுகாப்பு மற்றும் அடையாளப்படுத்துதல் என்ற வகையில் மாநாடு நடைபெறுகிறது என்றார்.

TAGS: