பாதகமாக முடிந்தது கோத்தபாய- முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையிலான சந்திப்பு

gota_001முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பில், இஸ்லாமிய அமைப்புகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு, முஸ்லிம்களுக்கு பாதகமானதாக நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சந்திப்பின் போது ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, கோத்தபாய ராஜபக்ஷவின் வழிநடத்தலின் பேரிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றதாக முஸ்லிம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதனை நிராகரித்துள்ள அவர், முஸ்லிம் சமூகங்கள் மீது பௌத்த அடிப்படை வாத பிக்குகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்த பட்டியல் ஒன்றை முன்வைத்தாக தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்தின் சில செயற்பாடுகளே சமூக ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுவதாக பௌத்த பிக்குகள் தெரிவித்திருப்பதாக கோத்தபாய இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிக்குகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு இணங்க முஸ்லிம் சமூகம் தங்களின் தவறுகளை ஒப்பு கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் இந்த விடயங்கள் தொடர்பில் யாரும் ஊடகங்களுக்கு தகவல் வெளியிடக் கூடாது என்று கோத்தபாய உத்தரவிட்டுள்ளதாகவும் குறித்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

TAGS: