இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டிருந்த 153 இலங்கைத் தமிழர்களையும் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்காக இலங்கை கடற்படைக் கப்பலொன்று அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இதற்காக தமது கப்பலொன்று அவுஸ்திரேலியா சென்று கொண்டிருக்கிறது, மோசமான காலநிலை காரணமாக ஒரு கப்பலில் இருப்பவர்களை ஏனைய கப்பலிற்கு மாற்றுவது மிகக்கடினமான நடவடிக்கையாக அமையப்போகின்றது என இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்நாட்டு கிறீன் கட்சி அறிவித்துள்ளது.
கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகாமையிலான கடற் பரப்பில் நிர்க்கதியான நிலையில் இருந்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்பி வைக்கின்றமை மனிதாபிமானமற்ற செயல் என அக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை மீளவும் இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை இரக்கமற்ற செயலாகும் என தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளினால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளிடமே ஒப்படைத்தமைக்கு நிகரான காரியத்தை அரசாங்கம் செய்ய முயற்சித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
நாட்டின் மனித உரிமை குறித்த நற்பெயருக்கு இந்த நடவடிக்கை களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது தெரிவித்துள்ளது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் பிரகடனத்தை மீறும் செயலாகும் என தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா நோக்கிப் பயனித்த 153 தமிழர்களும் இன்று இலங்க்கையை சென்றடைதிருப்பார்கள் என அவுஸ்ரேலியா செய்திகள் ஊர்ஜீதம் செய்துள்ளன. அந்த வகையில் இவர்கள் அனைவரும் கடல் மார்க்கமாகவே நாடுகடத்தப்பட்டுள்ளர்கள்.
அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் இந்த கடும்போக்கான புகலிடக் கொள்கை மிகவும் பராதூரமான மனித உரிமை மீறல் என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
தொடர்புபட்ட செய்தி
இந்த செய்தி ஆஸ்ட்ரேலிய தொலைக்காட்சி யிலும் வெளி வந்தது– அங்குள்ள எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன – பக்கத்தில் உள்ள தமிழ்நாடு ஏன் அடைக்களம் கொடுக்க முடியாது? எல்லாரும் நம் உடன் பிறப்புகள் என்று ஏன் நம்மால் நினைக்கமுடிய வில்லை? போரில் தான் உதவ முடிய வில்லை அடைக்களமாவது கொடுக்க முடியுமே? நம்முடைய கையால் ஆகா தனம் மிகவும் கேவலம்–