இலங்கை இராணுவத்திற்கு அண்மையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 30 பேர் இன்று புதன்கிழமை தங்களது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர்.
இந் நிகழ்வு முல்லைத் தீவு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
பயிற்சிகளை முடித்து வெளியேறிய இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் இராணுவத்தில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத பயிற்சிகளின் பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
என்ன இருந்தாலும் பெண் புலிபோல் வருமா ?
கண் துடைப்பு…..
புலிகேசி சொல்வது சரியே– எல்லாம் கண்துடைப்பே.5 ஆண்டுகள் கடந்தும் நம் உடன்பிறப்புகள் இன்றும் முள்வேலிக்கு பின் தான் இருக்கின்றனர். இந்தியா வீடு கட்ட கொடுத்த பணம் என்னவானது? ஏன் இன்றுவரை அவர்களை இவ்வளவு கொடுமை படுத்தவேண்டும்>? ஏன் இவ்வுலகில் இவ்வளவு அநியாயம் தலை விரித்து ஆடுகின்றது? ஐக்கிய நாட்டு சபை வெறும் பேருக்காகவே. ஒருகாலத்தில் கம்யுனிசம் மேற்கத்திய நாடுகளிடம் கொண்ட வேறுபாட்டினால் குளிர் யுத்தம் நடந்தது. ஆனால் இப்போது நடக்கும் இஸ்லாமிய .அநியாயங்கள் இவ்வுலகிற்கு பெரும் கேடு விளைவிக்கும். இதை பற்றி பேசினால் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு பிடிக்காது. அவர்களுக்கு ஜால்ரா போட்டால் நலமே. ஏன் யாவரும் ஒற்றுமையுடன் வாழமுடியாது? கட்டாயம் முடியும் நாம் யாவரும் மனிதர்கள் என்ற எண்ணம் இருந்தால். யாரும் உயர்ந்தவர்கள் இல்லை தாழ்ந்தவர்கள் இல்லை. யார் சொர்கத்திற்கும் யார் நரகத்திற்கும் போவார்கள் என்று யாருக்கும் தெரியாது — யாருக்கு தெரியும் சொர்க்கம் / நரகம் இருக்கின்றது என்று? திருக்குறள் உலக அளவில் தெரிய ஏதாவது செய்ய வேண்டும். நம்மவர்களில் எத்தனை பேருக்கு திருக்குறளை பற்றி தெரியும்? அதிலும் தமிழ் நாட்டு மக்களில் எத்தனை பேருக்கு தெரியும்? பொதுவாக நல்லது எங்கிருந்து வந்தாலும் ஏற்க கூடிய மன நிலை உலக மக்களுக்கு இருக்க வேண்டும், ஆனால் இந்த மதவாதிகள் குறிப்பாக முஸ்லிம்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது.