இலங்கை தமிழ் அகதிகள் 153 பேரை மீண்டும் இலங்கையிடம் அவுஸ்திரேலியா நடுக்கடலில் வைத்து கையளித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு மத்தியில், இலங்கை “சமாதான சமூகம்” என்று அந்த நாட்டின் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் 3 ஏ டபிள்யு என்ற வானொலி நிகழ்ச்சியில் இன்று வியாழக்கிழமை காலை கருத்துரைத்த அவர், நடுக்கடலில் வைத்து அகதி படகுகளை திருப்பியனுப்பும் செயற்பாட்டில் இரகசியங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தேர்தலுக்கு முன்னரே தாம் கொள்கையாக வெளியிட்ட விடயம் என்று அபோட் குறிப்பிட்டார்.
இதேவேளை தாம் தப்பிவந்த நாட்டுக்கே மீண்டும் அகதிகளை திருப்பியனுப்புவது குறித்து அபோட்டிடம் கேட்டபோது, தாம் சர்வதேச சட்டங்களை மதிப்பதால் அதன்படி செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தமது பார்வையின்படி, இலங்கையில் போருக்கு பின்னர் மனித உரிமை விடயங்களில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அபோட் தெரிவித்தார்.
எனினும் குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன், 153 பேரைக்கொண்ட இலங்கை அகதிகள் படகு மற்றும் 50பேரைக்கொண்ட மற்றும் ஒரு படகு தொடர்பில் கருத்துக்கூற மறுத்துவிட்டார்.
இதனை தொழில் கட்சியின் குடிவரவு பேச்சாளர் ரிச்சட் மார்ல்ஸ் கண்டித்துள்ளார். ஸ்கை நியூஸூக்கு இன்று காலை கருத்துரைத்த அவர், குறித்த படகுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள அனைவருக்கு உரிமை உள்ளது என்று குறிப்பிட்டார்.
இதேவேளை தமிழக அகதி முகாம்களில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இந்த 153 இலங்கை அகதிகளுக்கும் என்ன நடந்தது என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக அகதி முகாம்களில் உள்ள அவர்களின் உறவினர்கள் அங்கலாய்ப்பை வெளியிட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த அகதிகள் இலங்கையி;டம் கையளிக்கப்பட்டால் அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவர் என்றும் உறவினர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
153 இலங்கை தமிழர்களையும் ஏற்றிய இருபடகுகள் புதன்கிழமை மாலை இலங்கையை சென்றடையும்
அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான தான கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களையும் ஏற்றிய இரு படகுகள் புதன்கிழமை மாலை இலங்கையை சென்றடையவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இணைப்பு 02- அவுஸ்திரேலியா நோக்கி 153 புகலிக் கோரிக்கையாளர்களை பொறுப்பேற்க இலங்கையிலிருந்து கடற்படைக்கப்பல் :
அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களையும் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக இலங்கை கடற்படை கப்பலொன்று அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இதற்காக தமது கப்பலொன்று அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருக்கிறது, மோசமான காலநிலை காரணமாக ஒரு கப்பலில் இருப்பவர்களை மற்றக் கப்பலிற்கு மாற்றுவது மிகக்கடினமான நடவடிக்கையாக அமையப்போகின்றது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா நோக்கிப் பயனித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்பபடைக்கப்பட்டு இருக்கலாம்? அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது மர்மாக உள்ள அதேவேளை இவர்களை அவுஸ்திரேலிய கடற்படையினர் இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. படகிலிருந்தவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டு உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவலகள் தெரிவிப்பதாக கிறிஸ்மஸ் தீவின் ஜனாதிபதி கோர்டன் தோம்சன் தெரிவித்துள்ளார். படகிலிருந்தவர்கள் எவரும் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கான அறிகுறிகளோ அல்லது படகோ தென்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த 153 அகதிகளால் ஒரு பெரியதொரு மாற்றம் ஏற்படப் போகிறது. பைபிளில் 153 என்பது ஒரு வலுவான எண். இயேசு இறந்த பின் மூன்றாவது முறையாக தனது சீடர்களுக்குத் தோன்றினார். மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள் மீன்களைக் கரைக்குக் கொண்டுவந்த போது அவர்களிடம் 153 மீன்கள் இருந்ததாகப் பைபிள் குறிப்பிடுகிறது. இயேசுவின் கரம் இனி இவர்களோடு தொடர்ந்து இருக்கும் என நம்பலாம். நல்லதே நடக்கும்.