பொதுபல சேனா மீது எவரேனும் கை வைத்தால் முழுநாடும் கொந்தளிக்கும் ஞானசார தேரர் மிரட்டல் !

pothu bala senaஇரு தரப்­பி­ன­ருக்­கி­டையே ஏற்­பட்ட சிறிய பிரச்­சி­னை­யினை முழு­நாட்­டிற்கும் பரப்பி சர்­வ­தேச அளவில் முஸ்­லிம்கள் கொண்டு சென்­று­விட்­டனர். பொது­ப­ல­சேனா மீது எவ­ரேனும் கை வைத்தால் முழு­நாடும் கொந்­த­ளிக்கும்.

எமது தரப்பு நியா­யங்­களை ஜனா­தி­ப­தியும், பாது­காப்புச் செய­லா­ளருமே செவி­ம­டுத்­தனர். வேறு எவரும் அவற்றைக் கண்­டு­கொள்­ள­வில்லை என்று பொது­ப­ல­சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்களும் அமைப்பினரும் தர்கா நகரை அமைதியான நகரமாகவே தொடர்ந்தும் சித்திரித்தனர். ஆனால், தர்கா நகர் என்பது தீவிரவாதத்தின் மையப் பூமியாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மதவாதத்தையும் அதனூடாக தீவிரவாதத்தினையும் பரப்பி அப்பகுதி மக்களை பயங்கரவாதிகளாக மாற்றியுள்ளனர். இதன் விளைவாகவே அப்பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்சுட்டிக்காட்டினார்.பொது­ப­ல­சேனா அமைப்­பினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதேஅவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததவாது:

ஒரு கிரா­மத்தில் ஏற்­பட்ட சிறிய சண்டை இன்று சர்­வ­தேச மட்­டத்தில் கொண்டு செல்­லப்­பட்­டு­விட்­டது. அளுத்­கம சம்­பவம் ஏற்­பட்­ட­தற்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களின் செயற்­பா­டு­களே காரணம். சிறிய பிரச்­சி­னை­யாக ஆரம்­பித்த விடயம் இறு­தியில் இரு இனங்­க­ளுக்­கி­டை­யி­லான கல­வ­ர­மாக மாற்­றப்­பட்­டு­விட்­டது. நடந்த சம்­பவம் ஒரு சிறிய சம்­பவம். அதை பெரி­து­ப­டுத்தி நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் இல்லை. அது­மட்­டு­மின்றி இந்த பிரச்­சி­னைக்கு சம்­பந்தம் இல்­லாத எம்­மீது இறு­தியில் குற்றம் சுமத்­தி­விட்­டனர். இப்­போது ஆளும் தரப்­பி­னரும், எதிர்க்­கட்­சி­யி­னரும் பொது­ப­ல­சேனா அமைப்­பி­ன­ரையே குற்றம் சுமத்தி வரு­கின்­றனர். இது வேடிக்­கை­யா­கவும் எமக்கு வேத­னை­யா­கவும் உள்­ளது. உண்­மை­யி­லேயே இந்த சம்­பவம் ஏன் ஏற்­பட்­டது என்­பதை எவரும் கேட்­க­வில்லை. நாம் கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யாக தெரி­வித்தோம். நாட்டில் முஸ்லிம் மத­வா­தி­களின் தீவி­ர­வாத செயற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றது என.

அதை எவரும் கண்­டு­கொள்­ள­வில்லை. முஸ்லிம் அமைச்­சர்­களும் அமைப்­பு­களும் பேரு­வளை, தர்கா நகரை அமை­தி­யான நக­ர­மா­கவே தொடர்ந்தும் சித்­த­ரித்­தனர். ஆனால் தர்கா நகர் என்­பது தீவி­ர­வா­தத்தின் மையப் பூமி­யாகும்.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­திகள் மத­வா­தத்­தையும் அத­னூ­டான தீவி­ர­வா­தத்­தி­னையும் பரப்பி அப்­ப­குதி மக்­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக மாற்றி வைத்­துள்­ளனர். அதன் விளை­வா­கவே இன்று அப் பகு­தியில் இனக்­க­ல­வரம் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த பொசன் தினத்­திற்கு இரு வாரங்­க­ளுக்கு முன்னர் அப்­ப­கு­தியில் பன்­ச­லைக்கு முன்னால் மாடொன்­றினை வெட்டி பெளத்த மதத்தை அவ­ம­திக்கும் வகையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் செயற்­பட்­டி­ருந்­தனர். இது தொடர்பில் ஏன் எவரும் கண்­டனம் தெரி­விக்­க­வில்லை. நாட்டில் இன்று 30பெளத்த அமைப்­புகள் உள்­ளன. பெரும்­பான்மை சமூ­கத்தின் எண்­ணிக்­கையில் இது மிகவும் குறைந்த அளவே.

ஆயினும் சிறிய தொகை முஸ்­லிம்­க­ளுக்கு இலங்­கையில் 90முஸ்லிம் அமைப்­புகள் உள்­ளன. இதில் பல அமைப்­புகள் சர்­வ­தேச அளவில் தடை­செய்­யப்­பட்­டவை. இவை தொடர்பில் எந்­த­வொரு முஸ்லிம் அமைச்­சர்­களும் வாய் திறக்­க­வில்லை. நாம் பேசினால் எம்மை இன­வா­திகள் என சித்­த­ரிக்­கின்­றனர். அளுத்­கம சம்­ப­வத்­திற்கு மூல காரணம் நாம் என்றே இன்று அனைத்து முஸ்லிம் தரப்பும், அமைச்­சர்­களும், எதிர்க்­கட்­சி­களும் குறிப்­பி­டு­கின்­றன.

ஆம் இந்த இனக்­க­ல­வ­ரத்­திற்கு நாம்தான் காரணம். அவ்­வாறு பொது­ப­ல­சேனா அமைப்­பி­னர்தான் காரணம் என்றால் அதற்­காக எம்மை கைது செய்து சட்ட நட­வ­டிக்­கைகள் எடுங்கள். அதேபோல் கைது செய்­யப்­பட்­டுள்ள அப்­பாவி சிங்­கள இளை­ஞர்­களை உட­ன­டி­யாக விடு­வித்­து­விட வேண்டும். சம்­ப­வத்தில் ஆயு­த­மேந்­திய முஸ்­லிம்கள் இன்று சுதந்­தி­ர­மாக நட­மா­டு­கின்­றனர்.

ஆனால், கல­வ­ரத்தை தடுக்க முயன்ற சிங்­கள இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அர­சாங்­கமும், எதிர்க்­கட்­சியும், பொலிஸும் நாட்­டிற்கு உண்­மை­யாக நடக்க வேண்டும். அதை­வி­டுத்து பொது­ப­ல­சேனா அமைப்பின் மீது எவ­ரேனும் கைவைத்தால் இந்த நாடே கொந்­த­ளிக்கும். பொது­ப­ல­சேனா என்­பது வெறு­மனே ஐந்து உறுப்­பி­னர்­களைக் கொண்ட அமைப்பு அல்ல. பொது­ப­ல­சேனா என்­பது நாட்டில் உள்ள அனைத்து பெளத்த இனத்­தையும் சிங்­கள

மக்­க­ளையும் கொண்ட அமைப்பு. எம்மை அழிக்க நினைப்­பது பெளத்த மக்­களை அழிப்­ப­தற்கு சம­மாகும். இதை அனைத்து தரப்­பி­னரும் உணர்ந்­து­கொள்ள வேண்டும். மேலும், இந்த நாட்டில் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் முஸ்லிம் தீவி­ர­வாத செயற்­பா­டுகள் தொடர்பில் அனைத்துத் தரப்­பி­ன­ரி­டமும் நாம் எடுத்­துக்­கூ­றினோம்.

ஆயினும் எவரும் இதை கண்­டு­கொள்­ள­வில்லை. எனினும், எமது முறைப்­பா­டு­க­ளையும் கோரிக்­கை­க­ளையும் ஜனா­தி­ப­தியும், பாது­காப்புச் செய­லா­ள­ருமே கவ­னத்தில் எடுத்­துக்­கொண்­டார்கள். பல சந்­தர்ப்­பங்­களில் நாம் குறிப்­பிட்­டதை கவ­னத்­திற்­கொண்டு நாட்­டிற்கு எதி­ராக ஏற்­ப­ட­வி­ருந்த அசம்­பா­வி­தங்­களை தடுத்­தனர். எனினும், இதற்­காக பாது­காப்புச் செய­லா­ள­ருக்கும் எமக்கும் தொடர்­புகள் இருக்­கின்­ற­தென எவரும் குறிப்­பி­டு­வது ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது.

சமில லிய­னகே இதில் கருத்துத் தெரி­வித்த பொது­ப­ல­சேனா அமைப்பின் உறுப்­பினர் சமில லிய­னகே தெரி­விக்­கையில்;

தமிழ் மக்கள் புத்­தி­சா­லிகள், நேர்­மை­யா­ன­வர்கள் என்று வட மாகாண முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். இதனை முழு­மை­யாக நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். தமிழ் மக்கள் நேர்­மை­யா­ன­வர்கள், புத்­தி­சா­லிகள் என்ற நம்­பிக்கை சிங்­க­ள­வர்கள் மத்­தியில் இருந்­ததன் கார­ணத்­தி­னா­லேயே இன்றும் தமி­ழர்­க­ளுடன் ஒன்­றாக வாழ்­கின்­றனர். எனினும் விக்­கி­னேஸ்­வரன் போன்ற பிரி­வி­னை­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளி­னா­லேயே தமிழ் – சிங்­கள

சமூ­கத்­தி­டையே பிரி­வினை ஏற்­பட்டு முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றது எனவும் அவர் தெரி­வித்தார்.

இப்ப சிங்களவர்களுக்கு தமிழர்கள் நல்லவர்களாக தெரிகிறார்களாம் டோ !

TAGS: